வாட்ஸ் அப்பில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் !

0

வாட்ஸ் அப்'பில் அவ்வப்போது சில தகவல்கள் வைரலாக பரவி அனைவரையும் கவர்வதுண்டு. அந்த வரிசையில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் என்ற ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்பில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் !

கண்ணாடி நம் வாழ்க்கையில தவிர்க்க முடியாத பொருள். உள்ளதை உள்ளபடி காட்டக்கூடிய கண்ணாடியைக் குழந்தையின் மென்மையான இதயத்தோடு ஒப்பிட்டு சொல்வாங்க.

முதன்முதல்ல கண்ணாடி கண்டறியப்பட்டது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு. அந்த சம்பவம் கி.மு 5000-த்துல சிரியாவுல நடந்ததா சொல்லப்படுது. 

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

சிரிய கடற்கரை ஓரத்துல கட்டடம் கட்டுறதுக்கான பொருள்களை விற்கிற வியாபாரிகள் தங்கி யிருந்துருக்காங்க. 

சமைக்கிறதுக்காக சில கற்களை எடுத்து வந்து அடுக்கி அடுப்பு மூட்டின வியாபாரிகள், பேச்சு சுவாரஸ்யத்துல தீ மூட்டுன விஷயத்தையே மறந்துட்டாங்க. 

ஒரு கட்டத்துல உஷ்ணம் தாங்காம அந்தக் கற்கள் உருகி பளபளப்பான திரவமா நிலத்துல உறைஞ்சிருச்சு. 

அதை பார்த்தப்போ பார்த்தவர்களோட முகங்கள் அதுல பிரதிபலிச்சுச்சு. இந்த நிகழ்வை ரோமானிய வரலாற்றாசிரியர் பாலினி பதிவு செஞ்சிருக்கார். 

இது தான் கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டதற்கான தொடக்கம்ன்னு சொல்றாங்க. காலப்போக்குல கண்ணாடிகள் நம் வாழ்க்கையோட பாதியை ஆக்கிரமிச்சிருச்சு.

கண்ணாடி சொல்லும் முதல் பாடம் 

வாட்ஸ் அப்பில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் !

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. 

அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? 

பட்டாம் பூச்சி விளைவு என்றால் என்ன?

அதே போல் உன் சகோதரனிடம் நண்பனிடம் கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். 

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம் !

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். 

அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது

கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம் !

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! 

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். 

நெஞ்சு வலி ஏற்படுவதும் மாரடைப்பும் ஒன்றா?

அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும். 

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்...

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)