நெஞ்சு வலி ஏற்படுவதும் மாரடைப்பும் ஒன்றா?

நம் இதயம் ஒரு தசை. நிமிடத்துக்கு 70 – 80 முறை துடிக்கும் இந்த தசைப் பகுதிக்கு ரத்தத்தைக் கடத்தும் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டால், 
நெஞ்சு வலி ஏற்படுவதும் மாரடைப்பும் ஒன்றா?
ரத்தக் கட்டி உருவானால் அல்லது இன்னும் சில காரணங்களால் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதுதான், மாரடைப்பு.

நெஞ்சு வலியும் மாரடைப்பும் ஒன்றல்ல. தசைப் பிடிப்பு… நெஞ்சு எலும்பு, உணவுக் குழாயில் பிரச்னை போன்ற பல காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படலாம். அது மாரடைப்பல்ல. 
சாதாரண நெஞ்சு வலி, தாங்க முடிகிற அளவில் இருக்கும். மாரடைப்பின் போது நெஞ்சில் மிக அதிக வலி இருக்கும். 

அந்த வலி இடது கையில் பரவும்; அதிகமாக வியர்க்கும்; மூச்சடைக்கும்; மயக்கம், உச்சபட்சமாக மரணம்கூட ஏற்படும்.

பொதுவாக, முதல் அட்டாக்கில் 10 – 20 சதவிகிதம் பேர் மருத்துவ மனைக்கு வருவதற் குள்ளாகவே இறந்து விடுகிறார்கள். அந்தளவுக்கு அது தீவிரமாக இருக்கும்.

சைலன்ட் அட்டாக் வருமா? 
 சைலன்ட் அட்டாக் வருமா?
10 வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சைலன்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
புகை பழக்கத்தை நிறுத்த உதவும் பழங்கள் !
இவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைந் திருக்கும் என்பதால், மாரடைப்பு வந்தாலும் நெஞ்சு வலி தெரியாது. வாந்தி உணர்வு, மூச்சு விட சிரமம் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளை உணரலாம்.
 
யாருக்கெல்லாம் மாரடைப்பு வரலாம்? 
யாருக்கெல்லாம் மாரடைப்பு வரலாம்?
பெரும்பாலும் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களையே இலக்காகக் கொண்டிருந்த மாரடைப்பு, இப்போது 20+ வயதினருக்கே கூட ஏற்படுகிறது.

மரபு, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மனஅழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை மாரடைப்பின் காரணி களாகின்றன.

தேங்காய் எண்ணெயில் சமைத்தால் ஹார்ட் அட்டாக் வருமா?
தேங்காய் எண்ணெயில் சமைத்தால் ஹார்ட் அட்டாக் வருமா?
இது தவறான தகவல். தேங்காய் எண்ணெய், குறிப்பாக வெர்ஜின் தேங்காய் எண்ணெய் நமது உடலுக்கு நல்லதே.

இதய நோயாளிகள் காய், பழங்கள் அதிகமாகவும், சாதத்தைக் குறைத்தும், எண்ணெய் உணவுகள், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்தும் சாப்பிட வேண்டியது அவசியம். 
எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம் - மர்மத்திற்கு விடை கிடைத்தது !
விலை குறைவாகக் கிடைக்கும் மத்தி மீனில் (Sardine) இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் `ஒமேகா 3’ ஆயில் இருக்கிறது என்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடலாம்.

மாரடைப்பு வந்தால் சுயமுதலுதவி?
மாரடைப்பு வந்தால் சுயமுதலுதவி?
உதவிக்கு ஆள் இல்லாதபோது அட்டாக் வந்தால் மூச்சை இழுத்து விடவும், வேகமாக இருமவும் என்ற செய்தி வாட்ஸ்அப்-ல் பரவுகிறது. ஆனால், அது நிரூபிக்கப்படாதது. 

எனவே, இதுபோன்ற சுய முயற்சிகளில் ‘கோல்டன் ஹவர்’ எனும் அந்த பொன்னான நேரத்தை வீணாக்காமல், உடலில் மாற்றத்தை உணரும் நொடிகளிலேயே உடனடியாக மற்றவர்கள் உதவியை நாட வேண்டும். 
கையில் எப்போதும் ஆம்புலன்ஸ் நம்பர் வைத்திருப்பதுடன், சில நொடிகள்கூட தாமதப்படுத்தாமல் விரைவாக மருத்துவமனை செல்ல வேண்டும்.

ரெட் ஒயின் இதயத்துக்கு நல்லதா?
ரெட் ஒயின் இதயத்துக்கு நல்லதா?
ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் சிவப்பு திராட்சைகள் மூலம் தயாரிக்கப்படும் ரெட் ஒயின், ஒரு கிளாஸ் வரை மட்டும் குடித்தால் இதயத்துக்கு நல்லது. 

ஆனால், நம்மூரில் கிடைப்பது தரமற்ற ஒயின் என்பதால் தவிர்ப்பது நல்லது.

ஹார்ட் அட்டாக் நோயாளிகள் பையிலேயே வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள்?
ஹார்ட் அட்டாக் நோயாளிகள் வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள்?
ASPIRIN, ATORVASTATIN, CLOPITAB – இவை இதய நோயாளிகள் கையுடன் வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள் என்றும், 

ஹார்ட் அட்டாக் வந்த நேரத்தில் உடனடியாக இவற்றைச் சாப்பிட்டால், மூன்று மணி நேரத்துக்கு ஆபத்தில்லை என்றும் ஒரு செய்தி பரவலாக இருக்கிறது.
புரோஸ்ட்டேட் புற்றுநோய் !
இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதால் தப்பில்லை. முதல் ஒரு மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால் மேலும் ரத்தக்கட்டி உருவாவதை தடுக்கும். ஆனால், இது சிகிச்சை அல்ல. முதலுதவி மட்டுமே.
Tags: