வென்மையான நிறம் கொண்டவர்கள் மட்டுமே இந்திய திரைத்துறையில் பிரபலமாக இருக்க முடியும் என்று காட்டுபவையாக, திரைப்படங்களில் விளம்பரப் பதாகைகள் அமைந்திருந்தன. 

சாதிக்க நிறம் தேவை இல்லை என்பதை காட்டியுள்ளார்... மாடல் அழகி !

மென்மையான நிறத்தில் தோல் இருக்கும் பெண்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது, திருமணம் அமைகிறது, 

அல்லது மகிழ்வாக இருக்கிறார் என்பதைப் போல, தோல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டுகின்றன.

ஆனால் தன் நிறத்தை வைத்து கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னால் மாடலிங் துறையில் சாதித்து நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மக்களுக்கு முன் மாதிரியாக சாதித்திருக்கிறார். 

மாவு சத்து மிக்க ஆலூ பரோத்தா செய்வது எப்படி?

சிறு வயதில் தாயை இழந்த சான் ரேச்சல், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். 

அவருடைய ஆதரவே தான் மாடலிங் துறையில் கால் பதிக்கப் பெரிதும் உறுதுணையாக இருந்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல் கூறுகிறார்.

புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல். எங்க வீட்லயே நான் மட்டும் தான் கறுப்பு. 

உன்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்திக் கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க என சிரித்த முகத்தோடு பேசுகிறார் நம்ம ஊர் புதுச்சேரியைச் சேர்ந்தவரான சான் ரேச்சல்

சாதிக்க நிறம் தேவை இல்லை என்பதை காட்டியுள்ளார்... மாடல் அழகி !

சிறிய வயதில் புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்த அவர், முழுக்க முழுக்க தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். 

அவர் குடும்பத்தில் மற்றவர்கள் லைட் கலரில் இருக்க இவருக்கு மட்டுமே தமிழனின் உண்மையான நிறம் வாய்த்திருக்கிறது.

கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, 

பெண்கள் ஏன் பர்தா அணிந்து வெளியில் செல்ல வேண்டும்?

மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து தற்போது மாடலிங்கில் கலக்கி வரும் இவர், மிஸ் பாண்டிச்சேரி தான் என் மனதுக்கு எப்போதும் நெருக்கமானது என்கிறார்.

சிறு வயதிலிருந்தே தன்னைச் சுற்றியிருக்கும் பலரால் தன் நிறத்தின் காரணமாக பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்ட சான் ரேச்சலுக்கு, பிறரால் பேசப்பட்ட அவரது நிறத்தைக் கொண்டே சாதித்துக் காட்டியுள்ளார்.

தன் நிறத்தால் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். 

பொதுவாக மற்ற துறைகளைக் காட்டிலும் மாடலிங் துறையிலும், அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறப் பாகுபாடு இருக்கிறது.

சாதிக்க நிறம் தேவை இல்லை என்பதை காட்டியுள்ளார்... மாடல் அழகி !

கருமை நிறம் உள்ளவர்களைக் குறைவாகவும், வெண்மை நிறம் கொண்டவர்களை உயர்வாகவும் காட்டுகின்றனர். 

குறிப்பாக கருப்பு நிறம் கொண்டவர்கள் பல்வேறு விதத்தில் ஒதுக்கப்படுவது தன்னை பெரிதும் பாதித்ததால் அழகுக்கு நிறம் பொருட்டல்ல 

என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே மாடலிங் துறையில் களமிறங்கியதாகக் கூறுகிறார்..

கருப்பை பிரச்சனை குணமாக்கும் மாதுளம் பழம் சட்னி செய்வது !

அதன் முயற்சியாகவே மிஸ் புதுவை 2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 உள்ளிட்ட பல்வேறு அழகு போட்டியில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.