இலவச நீட் கோச்சிங் அளிக்கும் பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் !

0

சென்னை, பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் சார்பாக நடத்தப்பட்ட இலவச நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த முஹம்மது ஹுஸைபா நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவம் பயில  இலவச சீட் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இலவச நீட் கோச்சிங் அளிக்கும் பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் !
இதனை முன்னிட்டு நேற்று ஹுஸைபாவிற்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

மாணவன் ஹுஸைபா உட்பட 75 மாணவர்களில் 36 பேர் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !

பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் அளிக்கும் இந்த இலவச நீட் கோச்சிங்கினை உபயோகப்படுத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 

சாதி, மத பாகுபாடின்றி இங்கு யாரும் கோச்சிங் பெற வரலாம் என வரவேற்கிறது பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாத் நிர்வாகம்.

மாணவர்களுக்கு இலவச நீட் கோச்சிங் அளித்த மதிப்பிற்குறிய லெக்சரர்கள் அருள், புஷ்பலதா, திருநாவுக்கரசு, 

ஹூரீன், தபஸும் மற்றும் கஸாலி ஆகியோருக்கும் வழிகாட்டிகளாக செயல் பட்டவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். 

பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் என்பது கிபி.1653ல் கோல்கொண்டா சுல்தான்களின் ஆட்சியில் அரசவை அமைச்சராக இருந்த ருஷ்தம் (அஷ்திராபாத் துல்ஃபிகார் என்பருடைய மகன்) என்பரால் கட்டப்பட்டது. 

இலவச நீட் கோச்சிங் அளிக்கும் பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல் !

கோல்கொண்டா சுல்தான் ஹஜரத் ஆலம்பனா அப்துல்லாஹ் சையது சுஜைய்யிதா என்பவரது  ஆளுகைக்கு கீழ் சென்னை இருந்தபோது இப்பள்ளிவாசல் கட்டுப்பட்டுள்ளது. 

முட்டை உண்பதால் சர்க்கரை நோய் உண்டாகுமா?

இந்த பள்ளிவாசலின் வரலாற்றை கண்டறிந்தவர் தஞ்சை பல்கலைக்கழக கல்வெட்டியல் துறையுடன் இணைந்த பணியாற்றிய புலவர்  செ.ராசு என்பவர் ஆவார். 

இவர் 1938ல் இதனை கண்டறிந்து அரசுக்கு தெரிவித்துள்ளார். ஆலம்பனா  Jamesha Habib

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)