சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !

பல ஆயிரம் கோடிக்க ணக்கான செல்கள், உயிரிகளால் ஆன ஒரு மிகப் பெரிய உயிர் மண்டல ம்தான் மனித உடல். மூளை, நுரையீரல், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என ஒவ்வோர் உறுப்பும் இணைந்து,
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
ஆரோக்கியமாகச் செயல்பட்டால் தான் மனிதனால் இயங்கவே முடியும். `மனிதன் ஆறு மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு குரங்கில் இருந்து பரிணமித்தான்’ என்கிறது அறிவியல்.

குரங்கில் இருந்து இப்போது இருக்கும் பரிணாமத்தை அடைவதற்கு இடையில் 15 முதல் 20 வகையான வளர்ச்சிநிலைகள் இருந்தன.

நாகரிக வளர்ச்சி என்பது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் மனிதனின் தோற்றத்தில் மட்டும் அல்ல; உள் உறுப்புகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை எங்கு புகார் அளிப்பது?
இந்தத் தொடரின் முதல் பகுதியாக உடலின் ஒவ்வோர் அசைவுக்கும் காரணமாக இருக்கும் மூளையைப் பற்றிப் பார்க்கலாம்.

மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகம். நம் ஒவ்வொரு செயலையும் தூண்டுவது, செயல்படுத்துவது, கட்டுப்படுத்துவது மூளை தான். மூளை இன்றி உடலில் அணுவும் அசையாது. 

சர்வ அதிகாரமும் கொண்ட, உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக மூளை இருக்கிறது. மனித மூளை, ஒரு நாளில் வளர்ச்சி அடைந்துவிட வில்லை. இன்றைய மனிதனின் மூளை வளர்ச்சி அடைய ஏழு மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். 

அதுவும், `கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளில் தான் மூளையின் வளர்ச்சி அதிக வேகம் பிடித்தது’ என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
20-30 ஆண்டு களுக்கு முன்பே சிறுநீரகத்தில் நெஃப்ரான்கள் எப்படி ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன என்பதைப் பற்றியும், ரத்தத்தை எப்படி இதயம் சீராக பம்ப் செய்து உடல் முழுவதும் கொண்டு சேர்க்கிறது என்பதைப் பற்றியும், 

நுரையீரல் காற்று அறைகளில் ஆக்சிஜன் எப்படி பிரிக்கப் படுகிறது என்பதைப் பற்றியும், ஓரளவுக்குத் தெளிவான புரிதல் இருந்தது. ஆனால், இப்போது வரை மூளையைப் பற்றிய புரிதல் நம்மிடம் இல்லை. 

இப்போதும் மூளையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உலக அளவில் பல ஆயிரம் கோடி செலவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
உலக அதிசயங்கள் 7 என்று கூறுவது ஏன்? தெரியுமா?
மிகவும் சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள, மனித இனம் முயற்சி செய்து கொண்டு இருந்தது. மூளை ஆய்வின் வரலாறு கி.மு.4,000-க்கு முன் தொடங்குகிறது. 

அப்போதே, சுமேரியாவில் மூளையைப் பற்றி எழுதி வைத்துள்ளனர். பண்டைய எகிப்தியர்கள் உடலின் முக்கிய உறுப்பு இதயம் தான் என நம்பினர். மூளை என்பது மிகவும் சாதாரண, முக்கியமற்ற உறுப்பாக அவர்களால் கருதப்பட்டது.

கி.மு 300-ல் அலெக்சாண் டரின் மருத்துவர்கள் ஹீரோபிலிஸ் மற்றும் எரிஸ்ஸிடர்ஸ் முதன் முறையாக மனித மூளையை வெளியே எடுத்து, அதை மற்ற விலங்கின் மூளையுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
இதை அவர்கள் எழுதியும் வைத்துள்ளனர். மேலும், மைய நரம்பு மண்டலத்தையும் இவர்கள் கண்டறிந்து விளக்கினர்.

கி.மு 170-ல் ரோமானிய மருத்துவ நிபுணர் ஒருவர், ‘மூளை என்பது வெறும் ரத்தம், பித்தம் போன்ற வற்றைச் சுரக்கும் ஒரு சுரப்பி, இவை தான் மனிதனின் நடவடிக்கை களைக் கட்டுப் படுத்துகின்றன’ என்று கூறினார்.

தொடர்ந்து மூளை பற்றி அவரவர் மனதில் தோன்றியதை எல்லாம் கொள்கை களாகப் பிரகடனப் படுத்தி வந்தனர். மூளை பற்றிய ஆராய்ச்சிகள் நல்ல படியாகச் சென்று கொண்டிருந்தது.
கீழ்ப்பக்க முதுகுவலி குறைய உடற்பயிற்சி !
1664-ம் ஆண்டு முழுக்க முழுக்க மூளையின் அமைப்பு, செயல்பாடு களை விளக்கும் புத்தகத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் வில்லிஸ் வெளியிட்டார். 

இந்தப் புத்தகத்தில் தான் `நியூராலஜி’ எனும் வார்த்தைப் பயன்படுத்தப் பட்டது. 1811-ம் ஆண்டு `சார்லஸ் பெல்’ என்ற ஸ்காட்லாந்து அறுவை சிகிச்சை நிபுணர் தான், 

ஒவ்வொரு செயல் பாடுகளும் உணர்வுகளும் மூளையின் தனித்தனிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப் படுகின்றன’ என்றார்.

இதன் பிறகு, அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, மூளையின் ரகசியங் களைக் கட்டவிழ்த்து வருகிறது.

இன்று, மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சர்வ சாதாரணமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகி உள்ளது. மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளதா என்றும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

மூளை டவுட்
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
நாம் நம்முடைய மூளைத் திறனில் 10 சதவிகிதத்தைத் தான் பயன்படுத்து கிறோம்’ எனக் கூறப்படுவது உண்மையா? இல்லை. நாம் மூளையை முழுமையாகப் பயன்படுத்து கிறோம். 

உதாரணத்து க்கு இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்றால், அதற்கு மூளையின் ஃபிரண்டல் மற்றும் ஆப்டிக்கல் லோப் வேலை செய்ய வேண்டும்.
ஓட்டத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படி எல்லாம் கூட ஓட முடியுமா?
பார்ப்பதற்கு ஆப்டிக்கல் லோபும் படிப்பதற்கு ஃபிரண்டல் லோபும் துணை செய்கின்றன. நீங்கள் பார்க்கும் ஒவ்வோர் எழுத்து, வார்த்தையையும் ஆய்வுசெய்ய `ஹிப்போகாம்பஸ்’ பகுதி வேலை செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், சுவாசிக்கவும், உட்கார்ந்தோ, நின்று கொண்டோ இருக்கவும், ரத்தத்தை உடல் முழுக்கக் கொண்டு செல்லவும், 

சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகவும் மூளை வேலை செய்து கொண்டிருக்கி்றது. ஆனால், முழுத்திறனோடு பயன்படுத்துகி றோமா என்பதுதான் பிரச்னை.

மூளை மாற்று அறுவைசிகிச்சை 

இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்று இன்னும் சில ஆண்டுகளில் மூளை மாற்று அறுவைசி கிச்சைகூட வரலாம். மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பே இல்லை’ என்று பலரும் கூறிவந்தனர். 

இருந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் மட்டும் நடந்து வந்தன. 1950-களில் ரஷ்யாவில் நாய்களின் தலையை மாற்றி வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இந்த நாய்கள் எட்டு, ஒன்பது நாட்களிலேயே இறந்து விட்டன. 
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
1982-ம் ஆண்டில், எலியின் மூளையின் ஒரு பகுதியை எடுத்து, பாதிப்பு உள்ள மற்றொரு எலிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப் பட்டது.பொருத்தப்பட்ட பகுதியானது, மூளையுடன் இணைந்ததுடன் அந்தப் பகுதியில் இருந்த பாதிப்பையும் சரி செய்து விட்டது. 

இந்தப் பரிசோதனை முயற்சியை நியூயார்க்கில் உள்ள ‘மௌண்ட் சினாய் மெடிக்கல் சென்டர்’ மருத்துவர்கள் செய்தனர். 1998-ம் ஆண்டு இதே போன்று பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மூளை செல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப் பட்டதில், பக்கவாதப் பாதிப்புகள் பெருமளவு குறைந்து விட்டது கண்டறியப்பட்டது. 

இந்த செல்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப் பட்டவை. இப்படி மூளை மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Tags: