சுண்டக்கஞ்சி என்றால் என்ன? தெரியுமா?

0

பனை, தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் கள் போதை தருவதோடு, அதுவே உணவும் ஆகும். அது போல் தான் சுண்டக்கஞ்சி என்கிற சுண்டச்சோறு. 

சுண்டக்கஞ்சி என்றால் என்ன? தெரியுமா?
சுமார் ஒரு கிலோ அரிசியில் உப்பிடாமல் சாதம் பொங்கியவுடன் வடித்தெடுத்து ஆறியவுடன் ஒரு வகையான மரக்கொட்டையை அரைத்து சோற்றில் கலக்க வேண்டும். 

அத்துடன் கால் கிலோ கடலெண்ணெய் நீருடன் கலந்து பானையில் விட்டு மணலில் புதைத்து விட வேண்டும். 

(சமயத்தில், மிதமிஞ்சிப் போன அரிசி அல்லது அரிசிச் சோறு மிகுதியாக இருந்தால், அடுத்த நாளுக்கென நீர் ஊற்றி வைப்பார்கள். நல்ல வெயில் இருந்தால், அது மிகவும் புளித்து விடும். )

வீட்டின் ஒரு மூலையிலும் போடலாம். ஒரு ஏழு நாள் கழித்து பானையை எடுத்தால் அது தான் சுண்டச்சோறு. 

மணிக்கணக்கில் அடிக்கின்ற வெய்யிலில் மீன் பிடித்துத் திரும்பும் மீனவனின் பிரத்யேகமான போதை உணவு அது. 

வெய்யிலால் ஏற்படும் உஷ்ணத்தைத் தணித்துக் குளிர்ச்சியை தரும், களிப்பை நீக்கி மிதமான போதையை உண்டு பண்ணும். 

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

கள்ளு போல இருக்கும். அப்படி பரிசோதனை செய்யப்பட்டு உண்டாக்கப்பட்ட பானம் தான், சுண்ட கஞ்சி எனும் போதை தரக்கூடிய, நன்றாக புளிப்பேறிய (ஃபெர்மென்டட், FERMENTED) பானம். 

ஆனால் இருபது வருட காலமாக அது சட்ட விரோதமென்று அறிவிக்கப்பட்டு விட்டது. 

ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்று சொல்கிறார்களே, அது போல ஒற்றை போதையான டாஸ்மாக் வந்து விட்டது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)