மலம் கழித்த சிறுவனுக்கு ஆசிரியர் செய்த கொடூரச் செயல் !

0

கர்நாடகாவின் உள்ள சந்தேகல்லூர் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் பள்ளி சீருடையில் மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது. 

மலம் கழித்த சிறுவனுக்கு ஆசிரியர் செய்த கொடூரச் செயல் !

இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் ஹுலிகெப்பா சமையல் அறையிலிருந்து கொதிக்கும் நீரை சிறுவனின் மீது ஊற்றி இருக்கிறார். 

இதனால் வேதனையில் துடித்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். 

பரிசோதித்த மருத்துவர்கள் 40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறான். 

இது தொடர்பாக காவல்துறை, சம்பவம் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. தற்போது வரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. 

எங்கள் டீம் பள்ளியை ஆய்வு செய்தது. ஆனால் அது கல்வித் துறையின் கீழ் வருவதால், தானாக புகார் அங்கிருந்து வர வேண்டும்.

இல்லை யென்றால் காவல்துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வர வேண்டும். புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings