உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. 

புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனைகள் !
அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது புற்றுநோய் (Cancer). 

புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பக்கால நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கின்றனர் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள். 

ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

மாறி வரும் ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் வரத்தான் செய்கின்றன. 

அதே நேரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படைத் தெளிவும், தற்காப்பு அக்கறையும் இல்லாமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது. அதை எப்படி டெஸ்ட் செய்து உறுதிப்படுத்துவது?

கேன்சர் ஆன்டிஜன் (சிஏ) – 125: 

சினைப்பை புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை இது.

கேன்சர் ஆன்டிஜன் (சிஏ) 15-3: 

இது இயல்பான மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாக்கும் ஒரு வகையான புரதம். மார்பகப் புற்று நோயைக் கண்காணிக்க இந்தப் பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது.

கேன்சர் ஆன்டிஜன் 27.29 (சி.ஏ 27.29): 

மார்பகப் புற்று நோயைக் கண்டறியவும், சிகிச்சையை கண்காணி க்கவும் உதவுகிறது.

தண்ணீர் அதிகமா குடித்தால் உடலில் பாதிக்கப்படும் பாகங்கள் தெரியுமா? 

கார்போ ஹைட்ரேட் ஆன்டிஜன் (சிஏ) 19-9: 

இந்தப் பரிசோதனை மூலம் கணையப் புற்று நோயைக் கண்டறிய லாம். 

இது தவிர, பெருங்குடல், நுரையீரல், பித்தப்பை புற்று நோய்கள், பித்தப்பை கல், கணைய அழற்சி, கல்லீரல் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சையைக் கண்காணிக் கவும் பயன்படுகிறது.