அருகம்புல்லின் அரிய மருத்துவ குணம் !

ஆகாதது அருகம் புல்லால் தான் ஆகும் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழியின் கூற்றுபடி, அருகம் புல்லினால் உண்டாகும் நன்மைகள்.  நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும்.
அருகம்புல்லின் அரிய மருத்துவ குணம் !
மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத்தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும். உடல் வெப்பம் தணியும். 

தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள். 

அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும். 
பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிலக்கு தொல்லைகள் நீங்கும். மசாஜ் செய்து விட்டதைப் போல, உடம்பு உற்சாகமாக இருக்கும்.
அருகம் புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து அரைத்து உச்சந் தலையில் பற்றுப் போட்டால், தலைவலி குணமாகும். 

தூதுவளை வேரையும், அருகம்புல்லையும் கசக்கி, துணியில் வைத்து, பல்வலி இடது புறமிருந்தால், வலது காதிலும், வலது புறமிருந்தால், இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால், வலி உடனே நீங்கும்.

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது. 

தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது. அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். 
அருகம்புல்லின் அரிய மருத்துவ குணம் !
அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்து வர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும். 
அருகம்புல்லில் நீர் விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும் போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும் போது உடல் குளிர்ச்சி அடையும். 

வெள்ளைப் போக்கு, வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
Tags: