கியோட்டோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கி யுள்ளார்கள்.
ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணு !
அதனை இயற்கையாக எலியிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கை முறையில் கருக்கட்டச் செய்து, எலிகளை உருவாக்கி யுள்ளனர்.

ஒப்பீட்டளவில் ஸ்டெம் செல்லிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணு வானது எளிமையான கலங்கள் ஆகும்.
ஆனால் முட்டையினது கலம் (egg) மிகவும் சிக்கலானவை. எனவே தான் இப்புதிய செயன் முறையானது அசாதாரணமான வெற்றியாகக் கருதப் படுகிறது. 

பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே இருந்த போதும் ஸ்டெம் செல்லிருந்து பெறப்பட்ட முட்டையி லிருந்து

ஆரோக்கியமான சுண்டெலி களை உருவாக்கிய விகிதாசாரம் விகிதம் குறைவாக இருந்தது. 

சாதாரண முட்டையிலிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்த போது ஸ்டெம் செல் முட்டையி லிருந்து 3.9% சதவிகிதமே உருவாக்க முடிந்தது.
ஆனாலும் இதை ஒரு பின்னடைவாகக் கருத முடியாது குழந்தைப் பேறற்ற பெண்களில் முட்டைகளை உருவாக்கக் கூடிய இம்முயற்சி மிக வரவேற்கத்தக்கது. 

அறிவியல் பாய்ச்சலுடன் கூடிய மிக முன்னேற்ற கரமான தொழில் நுட்ப வளர்ச்சி இதுவாகும்.

இந்தச் செயல்முறை விகிதாசார ரீதியில் பெரு வெற்றியல்ல என்ற போதும், குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்தன என்பதும், 
அவை வளர்ந்த பின்னர் மலட்டுத் தன்மையின்றி கருவளம் கொண்டவையாக இருந்தன என்பதும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.

புதிய எல்லைகள் வகுக்கப்படும்... 
ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணு !
நீண்ட காலம் எடுப்பதும் அர்ப்பணிப்புடன் கூடியதுமான இந்த செயல்முறை, புத்தறிவியல் ரீதியில் ஒரு முக்கியமான மைற்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆயினும் இவை மேலும் முன்னேற்றம் அடைந்து மனிதர்களில் களஆய்வு ரீதியாகச் செய்யப் படுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.
ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் முட்டைகளை உருவாக்க முடிவதானது மலட்டுத் தன்மைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தவும் உதவும்.

அதற்கு மேலாக முட்டையின் வளர்ச்சி, அவை முதிர்ச்சியடையும் விதம், ஏன் அவை சிலரில் தவறாக உருவாகின்றன,
அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி போன்ற விடயங்களில் ஆழமான நுண்ணறிவு பெற உதவும். இது மலட்டுத் தன்மைக்கான சிகிச்சையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்