வாணியம்பாடி அருகே மனைவியின் தங்கை மீது கணவர் திரவியம் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியை அடுத்துள்ள பூங்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். 

மனைவியின் தங்கை மீது திரவியம் ஊற்றியதால் பரபரப்பு !

இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

செவிலியரான தேன்மொழியைக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தச் சூழலில் ராஜேஷ்- தேன்மொழி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 

சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேன்மொழி தனது கணவரைப் பிரிந்து சென்று விட்டார். 

கொஞ்ச நாட்கள் தாய்வீட்டில் இருந்த தேன்மொழி, அதன் பின்னர் வெளிநாட்டில் செவிலியர் பணி தொடர்பாக வேலை கிடைக்கவே அங்குச் சென்று விட்டார்.

காதல் மனைவி தேன்மொழி பிரிந்து சென்று விடவே என்ன செய்வதெனப் புரியாமல் இருந்துள்ளார் ராஜேஷ். இதற்கிடையே தேன்மொழிக்கு தமிழ் மொழி என்ற தங்கை ஒருவர் இருக்கிறார். 

மனைவி விட்டுச் சென்றதால் மச்சினிச்சியைத் தனது காதல் வலையில் சிக்க வைக்க முயன்றுள்ளார். இதற்காகத் தமிழ் மொழியிடம் பல முறை பேசவும் முயன்றுள்ளார். 

இருப்பினும், அது எதுவும் அவருக்குப் பலன் தரவில்லை. இந்தச் சூழலில் நேற்றைய தினம் தமிழ்மொழி பூங்குளம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்துள்ளார். 

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?

அந்தச் சமயம், அங்கு வந்த ராஜேஷ், திடீரென மறைத்து வைத்திருந்த திரவியத்தைத் தமிழ்மொழி மீது ஊற்றியுள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ் மொழி கூச்சலிட்டுள்ளார். 

அமிலம் ஊற்றியிருக்கலாம் எனச் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஆலங்காயம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

அங்குத் தமிழ் மொழியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ராஜேஷ் அவர் மீது ஊற்றியது அமிலம் இல்லை என்பது தெரிய வந்தது. 

தமிழ் மொழி மீது ராஜேஷ் ஒரு வகையான எண்ணெய் போன்ற திரவியத்தை ஊற்றி உள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலங்காயம் போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

அதாவது மனைவி விட்டுச் சென்றதால் மச்சினிச்சி தமிழ் மொழியை தனது காதல் வலையில் சிக்க வைக்க ராஜேஷ் முயன்றுள்ளார். 

இருப்பினும், தமிழ் மொழி சரியாகப் பேசாததால், நண்பர்கள் கூறிய ஐடியாவை கேட்டு, வசிய மருந்தைக் கொடுத்து காதல் வலையில் விழ வைக்க முயன்றுள்ளார் ராஜேஷ். 

சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !

தனது குற்றத்தை ராஜேஷும் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.