சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !

உடலில் மிகவும் முக்கியமான உறுப்பான சிறு நீரகங்களுக்கு நாம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகங் களில் பிரச்சனை ஏற்பட்டால், உடல் ஆரோக்கியமே மோசமாகி விடும்.

மேலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் உடலில் ஏற்படத் தொடங்கும். சிறுநீரகங்கள் அன்றாடம் உடலினுள் நிறைய வேலைகளை செய்கிறது. 

அதில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரை பிரித்து உடலில் இருந்து வெளி யேற்றுதல், 

குறிப்பிட்ட ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் மற்றும் ஒரு சில கனிமச் சத்துக்களை உறிஞ்ச உதவுதல் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
அத்தகைய சிறுநீரகங்கள் பாதிப்படை வதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் ஒருசில பழக்க வழக்கங்கள் தான்.

இங்கு சிறு நீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்க வழக்கங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை தவிர்க்க முயற்சி செய்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால் சிறுநீரங்கள் பாதிப்படையும் என்பது தெரியுமா?

அதிலும் ஆல்கஹால் குடித்தால், கல்லீரல் பாதிக்கப் படுவதுடன், சிறு நீரகங்களும் மெதுவாக பாதிக்கப்பட ஆரம்பிக்கும். 

குறிப்பாக இரவு நேரங்களில் ஆல்கஹாலை அதிகம் பருகும் போது சிறுநீரங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும்.
புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியானால் புகைப் பிடிப்பதால் உடலின் பல்வேறு பாகங்க ளுக்குச் செல்லும் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீராக செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. 

முக்கியமாக சிறுநீரகங் களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப் பட்டால், சிறு நீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, சிறுநீரகங்கள் மெதுவாக செயலிழக்க ஆரம்பிக்கும்.

நீங்கள் கார்போனேட்டட் பானங்கள் அதிகம் விரும்பி குடிப்பீர்களா? சிறு நீரகங்களை விரைவில் பாதிக்கும் பழக்க வழக்கங்களில் முதன்மை யானது தான் சோடாக்களை அதிகம் குடிப்பது.

மேலும் ஆய்வு ஒன்றிலும் சோடாக்களை தொடர்ந்து அதிக அளவில் குடித்து வந்தால், சிறுநீரங்களில் புரோட்டீனின் அளவு அதிகரிக்கும். 

சிறுநீரில் புரோட்டீன் அளவு அதிகம் இருந்தாலே, அது சிறுநீரங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியே. ஆகவே சோடாக்கள் பருகுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
குழந்தை தூங்கும் அறையில் அதை செய்பவரா? இதப் படிங்க முதல்ல ! 
சிறுநீர் வெளிவரும் போது அதனை வெளியேற்றாமல் அடக்கிக் கொண்டு இருந்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, அது சிறுநீரகங் களைப் பாதிக்கும். 

ஆகவே எவ்வளவு தான் முக்கியமான வேலையாக இருந்தாலும், சிறுநீர் வந்தால், அதனை அடக்காமல் உடனே வெளியேற்றி விடுங்கள்.

நீங்கள் தண்ணீரை குறைவாக குடிப்பவராக இருந்தால், உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்வதோடு, அந்த நச்சுக்கள் இரத்தத்தில் கலந்து, 

அதுவே சிறுநீரகங் களை பெரும் பிரச்சனைக்கு உள்ளாக்கும். ஆகவே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
உடலியக்கம் குறைவாக இருந்தாலும், அது சிறுநீரகங் களை பாதிக்கும். ஆகவே அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். 

இதனால் உடல் எடை சீராக இருப்பதோடு, சிறுநீரகங் களுக்கு ஏற்படும் பாதிப்பும் 30 சதவீதம் குறையும்.

நீங்கள் அன்றாடம் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளா விட்டால், அதுவும் சிறுநீரகங் களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே தினமும் தவறாமல் குறைந்தது 7 மணிநேரம் தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப் படும். அதிலும் வைட்டமின் பி6 குறைந்ததால், சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 
எனவே உணவில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சேர்த்து, உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரகங் களின் செயல் பாடுகளுக்கு ஒருசில கனிமச் சத்துக்களும் மிகவும் அவசியம். அவற்றில் குறைபாடு ஏற்பட்டாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். 

உதாரணமாக, மக்னீசியம் குறைந்தால், உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாது. உடலில் கால்சியத்தின் அளவு குறைந்தால், சிறுநீரகங்களில் கற்கள் உருவாக ஆரம்பிக்கும். 

எனவே பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ், விதைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவின் சுவையை அதிகரிக்க உதவும் உப்பின் அளவு அதிகரித்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே உணவில் உப்பை அளவாக சேர்த்து, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
காஃபைன் நிறைந்த காபி, டீ போன்றவற்றை அதிகம் எடுத்து வந்தால், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே காபி, டீ போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஏனெனில் காஃபைன் இரத்த அழுத்தத்தை நேரடியாக தாக்கும். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

புரோட்டீன் உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது சிறுநீரகங் களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனவே புரோட்டீன் நிறைந்த உணவுகளை சீரான அளவில் உட்கொண்டு வர வேண்டும்.
எதற்கு எடுத்தாலும் மாத்திரைகளைப் போடும் பழக்கத்தைக் கொண்டால், அதனால் முதலில் பாதிக்கப் படுவது சிறுநீரகங்கள் தான். 

ஆகவே எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் கண்ட கண்ட மாத்திரைகளைப் போடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

உடலில் ஏற்படும் ஒருசில குறைபாடுகளை சாதாரணமாக நினைத்து விட்டால், உடலின் செயல்பாடுகள் குறைந்து, அதனால் பாதிக்கப் படுவது சிறுநீரகங்கள் தான். 
ஆகவே உடலில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கு முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகங்கள் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

அத்தகையவர்கள் உடலின் இயக்கம் சீராக செயல்பட, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இல்லா விட்டால், முதலில் பாதிக்கப்படப் போவது சிறுநீரகங்கள் தான்.
Tags:
Privacy and cookie settings