ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அருகே வீட்டிற்கு டிவி பார்க்க வந்த 15 வயது சிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த
நான்கு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுவையான மெக்ஸிகன் ரைஸ் செய்வது எப்படி?
குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களை சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண்கள் சிறுமிகள் மட்டுமல்ல 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களும் பாலியல் சம்பவங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் தான் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த வகையில் 15 வயது மாணவனுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் வன்கொடுமை செய்த நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா குட்மெண் பேட் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னா என்பவருக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது
24 வயதில் இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி !
இதனையடுத்து அவரை பிரிந்த ஸ்வப்ணா தனது குழந்தைகளுடன் வேறு ஒரு பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி இருக்கிறார்.
இந்நிலையில் அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார்.
கணவனைப் பிரிந்து இருந்த ஸ்வப்னா அந்த சிறுவனை தனது வலையில் வீழ்த்த நினைத்து அவருக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் உணர்வை தூண்டியுள்ளார்.
மேலும் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பல மாதங்களாக இந்த வன்கொடுமை நிகழ்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனை மூளைச்சலவை செய்த ஸ்வப்னா அவருடன் கடந்த பத்தாம் தேதி ஊர்ல இருந்து மாயமாகியுள்ளனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் சென்ற அவர்கள் அதன் பிறகு எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.
இதனையடுத்து தனது மகனை காணவில்லை என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சிறுவன் அடிக்கடி எதிர் வீட்டில் இருந்த ஸ்வப்னாவின் வீட்டுக்கு சென்றதும் கடைசியாக அவரது வீட்டுக்கு சென்ற பின்னரை மாயமானதும் தெரிய வந்தது.
சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?
இதனை தொடர்ந்து அவர் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர் அவரது செல்போன் என்னைப் பெற்று அதனை ஆய்வு செய்தனர்.
அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சொப்பன சிறுவனுடன் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு வரைந்த போலீசார் சிறுவனை மீட்டதோடு ஸ்வப்னாவை அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு தற்போது மனநல ஆலோசனை வழங்கி பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.