மொய் விருந்து விழாவில் ரூ.15 கோடி வசூல்... அசத்திய அவர்கள் !

0

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு, ஆவணம், ஆலங்குடி வரைக்கும், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் களை கட்டுகிறது மொய் விருந்து. 

மொய் விருந்து விழாவில் ரூ.15 கோடி வசூல்... அசத்திய அவர்கள் !

மொய் விருந்து என்றவுடன், சின்னக்கவுண்டர் படத்தில் சுகன்யாவின் மேல் பரிதாபப்பட்டு, விருந்து சாப்பிட்டு விட்டு விஜயகாந்த் இலைக்குக் கீழே பணம் வைத்துச் செல்வாரே அது தானே என்று கேட்பீர்கள். 

அதுவல்ல மொய் விருந்து. ஜாதி, மதம் கடந்து, அனைத்து மக்களையும் ஒற்றை இழையில் இணைக்கும் பொருளாதார பந்தம் இது. அந்தக் காலத்தில் 25 ரூபாய், 50 ரூபாய் மொய் இருந்தது. 

இப்போது குறைந்தபட்சமே 100 ரூபாய் தான். உதாரணத்துக்கு, ஒருவர் நமக்கு 100 ரூபாய் மொய் எழுதியிருக்கிறார். 

வியக்க வைக்கும் நன்மைகள் கொண்ட விளக்கெண்ணெய் பற்றி தெரியுமா? உங்களுக்கு !

5 ஆண்டுகள் கழித்து அவர் மொய் விருந்து நடத்துகிறார் என்றால் கூடுதலாக 100 ரூபாய் புதுநடை எழுத வேண்டும். அதற்குக் குறைவாக எழுதினால், பொது இடத்தில் அதைக் குறிப்பிட்டு அவமரியாதையாகப் பேசுவார்கள்.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் கலை இழந்து காணப்பட்ட நிலையில்,

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில், 

கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து  ஒரே பொது இடத்தில் மொய் விருந்து விழா வைத்துள்ளனர்.

இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய் வரையில் மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. 

மொய் விருந்து விழாவில் ரூ.15 கோடி வசூல்... அசத்திய அவர்கள் !

இதில் அந்த கிராமத்தை சேர்ந்த  ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது.

செல்போனில் ஐந்து மணி நேரம் செலவிடுகிறீர்களா? மார்டின் கூப்பர் ! 

மேலும் அந்த விழாதாரர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா 50 லட்சம் ரூபாய் வரையில் மொய் தொகை வசூல் ஆகி உள்ளதாகவும் தெரிகிறது. 

இதனால் அந்த மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)