செல்போனில் ஐந்து மணி நேரம் செலவிடுகிறீர்களா? மார்டின் கூப்பர் !

0

ஜோயல்... நமது கனவு பலித்து விட்டது. நான் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மையாகவே செல்போனில் தான்... என்று 

செல்போனில் ஐந்து மணிநேரம் செலவிடுகிறீர்களா? மார்டின் கூப்பர் !

மார்ட்டின் கூப்பர் பேசியது தான் உலகின் முதல் அதிகாரப்பூர்வ மொபைல் அழைப்பு என்று கருதப்படுகிறது. 

இனி எதிர்காலத்தில், ஒவ்வொருவரின் சட்டைப்பையிலும் ஒரு தந்திக்கருவி இருக்கும் என்று தந்தை பெரியார் சொன்னது 1930-ம் ஆண்டில். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் கழித்து இன்று ஒவ்வொருவரின் கையிலும், 

ஒவ்வொருவரின் சட்டைப்பையிலும் என நம்முடன் எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறது, ஒரு கட்டைவிரல் தொழில்நுட்பம் !

செல்போனில் ஸ்க்ரோலிங் செய்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு சில வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் உலகின் முதல் மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர்.

தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ் செய்வது எப்படி?

93 வயதான அமெரிக்க பொறியியலாளர் மார்ட்டின் கூப்பர், ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேல் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் உங்களுக்கான வாழ்க்கையைப் பெறுங்கள்! என அட்வைஸ் செய்துள்ளார். 

பெத்த அம்மா, அப்பா சொல்லியே கேக்கல… இவர் யாரு சொல்றது என்று நீங்கள் நினைக்கலாம். செல்போன் எனும் சாதனத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர் தான். 

இவரே தான் தற்போது, உங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சொல்கிறார். இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் இந்த செல்போனைக் கண்டுபிடித்தவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 

இவர் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது பெற்றோர்கள் உக்ரைனிய யூதக் குடியேறிகள். 

செல்போனில் ஐந்து மணிநேரம் செலவிடுகிறீர்களா? மார்டின் கூப்பர் !

முதல் அழைப்பு பேசி விட்டார் என்றாலும் அந்த மொபைல் நாம் இப்போது உபயோகிப்பது போல் அவ்வளவு சுலபமாக இல்லை. 

கூப்பர் முதன் முதலாக பயன்படுத்திய டைனா ஏ.டி.சி போன் கிட்டத்தட்ட ஒரு செங்கல்லைப் போலவே இருந்தது.

இந்த வார தொடக்கத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கூப்பர் தான் செல்போனில் நேரத்தை செலவிடுவதில்லை என்று கூறினார்.

  நான் எனது மொபைல் ஃபோனை எனது தினசரி நேரத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்துகிறேன் என்று யூகிக்கிறேன். என்றும் அவர் தெரிவித்துள்ளார். யோசித்துப் பாருங்கள்.., 

ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மணி நேரம் மட்டும் தான் அவர் தனது செல்போனை பயன்படுத்துகிறார். 

ஆனால், நாமோ 20 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் QWICK CHARGE வகை போன்களை வாங்குகிறோம்… 

வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் செய்வது எப்படி?

அப்படிப்பட்ட போனில் கூட சார்ஜ் போட்டுக் கொண்டே ஃபோனை நோண்டுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு நாளில் ஐந்து மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போனில் செலவழிப்பவர்களிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு அவர் நேர்மையாக இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நீங்கள் உண்மையில் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் செலவிடுகிறீர்களா? அப்படி எனில் உங்களுக்கான உண்மையான ஒரு வாழ்க்கையைப் பெறுங்கள்! என்று தான் நான் கூறுவேன் என பதிலளித்துள்ளார்.

செல்போனின் கண்டுபிடிப்பாளராக இருந்த போதிலும், கூப்பர் பிபிசி-யிடம், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் குறைந்த நேரத்தை செலவிட வேண்டும் என்றும் கொஞ்சம் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

செல்போனில் ஐந்து மணிநேரம் செலவிடுகிறீர்களா? மார்டின் கூப்பர் !

செல்போன் பயன்பாட்டு கண்காணிப்பு நிறுவனமான App Annie இன் தரவுப்படி, மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.8 மணி நேரம் தங்கள் செல்போன்களில் செலவிடுகிறார்கள். 

இது வாரத்திற்கு 33.6 மணிநேரமும், மாதத்திற்கு 144 மணிநேரமும் ஆகும். 1973 ஆம் ஆண்டில், கூப்பர் மோட்டோரோலா டைனாடாக் 8000X என்ற முதல் வயர்லெஸ் செல்லுலார் கருவியைக் கண்டுபிடித்தார்.

இதன் உருவாக்கம் பற்றி சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது அவர், ஃபோன் SWITCH OFF ஆவதற்கு முன்பு நீங்கள் 25 நிமிடங்கள் வரை பேசலாம். என்றார்.

கூப்பர் செல்போனைக் கண்டுபிடிக்கும் போது, மக்கள் அது எப்படி வேலை செய்யும் என்று யோசிப்பதற்கு முன்பே அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு தெரு முழுவதும் சேலத்து குழம்பு... சுவாரசியமான கதை ! 

உங்கள் பாக்கெட்டில் வைக்கும் அளவுக்கு சிறியது, உங்கள் காதுகளுக்கும் வாய்க்கும் இடையில் செல்லும் அளவுக்கு பெரியது, என்று அவர் கூறினார்.

மோட்டோரோலாவில் பணிபுரியும் போது, முதல் கையடக்க போலீஸ் RADIO SYSTEM உட்பட பல தயாரிப்புகளை கண்டுபிடிக்க உதவினார்.

கூப்பர் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (IIT) 1950 ஆம் ஆண்டு மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 

பின் அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து, கொரிய போரின் போது பணியாற்றினார். 

போருக்குப் பிறகு, அவர் Teletype Corporation இல் சேர்ந்தார், மேலும் 1954ம் ஆண்டு முதல் அவர் மோட்டோரோலாவில் பணியாற்றத் தொடங்கினார்.

அன்று கூப்பர் தொடங்கிய தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து, இன்று இந்த உலகத்தையே ஒற்றை விரலில் இயக்கிக் கொண்டிருக்கிறது. 

ஒரு மொபைல் போன் எப்படி கம்ப்யூட்டரை, கடிகாரத்தை, இணையத்தை, கேமராவை, தபாலை, தந்தியை, புத்தகப்படிப்பை என அனைத்தையும் தனக்குள் இணைத்திருக்கிறது என்பது ஆச்சர்யமே. 

என்றாவது ஒரு நாள் மனித மூளையையும் இந்த தொழில்நுட்பம் ஜீரணித்து விடுமா என்று கேட்டபோது மார்ட்டின் கூப்பர் இப்படி சொன்னார்.

செல்போனில் ஐந்து மணிநேரம் செலவிடுகிறீர்களா? மார்டின் கூப்பர் !

உங்களது வாழ்க்கை உங்களது விரல்நுனியில் என்று மாற்றியமைத்துள்ள இந்த தொழில்நுட்பத்தை, நீங்கள்தான் நடத்திச் செல்கிறீர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள். 

AI என்ற ஆர்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ் இப்போதுதான் தோன்றியுள்ளது. ஆனால் மனித மூளையோ மிகவும் பழமையானது. 

இலவச தையல் இயந்திரம் பெற முழு விவரம் தெரிந்து கொள்ள ! 

இப்போதைய 5ஜி, இனிவரும் பற்பல புதிய தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் முன்னோடி மூளை தான் என்பதுடன், 

புதியன எதுவும் தன்னை வெற்றி கொள்ள விடாமல் அவற்றை வழிநடத்தும் உன்னதப் படைப்பு மனித மூளை என்பதை மறவாதீர்கள்... என்றார் இந்த 92 வயது படைப்பாளி!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)