அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு... எப்படி விண்ணப்பிப்பது?

0

தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களை தொகுத்து வழங்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்  வாய்ப்பு... எப்படி விண்ணப்பிப்பது?

இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு 

விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமும், விருப்பமும் உடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

இவர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் தூயத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடியவராகவும், நல்ல குரல் வளத்துடன் கூடிய ஆர்வம் உடையவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை 9 என்ற முகவரியில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பணியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)