பொம்மைகள் எத்தனை இருந்தாலும், செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உருவாகும் பிடிப்பு உயிரோட்டமானது. அதைக் கவனித்துக் கொள்ளும் போது குழந்தையும் ஒரு தாயாக/தந்தையாக மாறி விடும். 

செல்லப் பிராணியை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை?

செல்லப் பிராணி வளர்ப்பு, ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமல்ல; உடல்நலம், மனநலம், சமூகநலம் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டது. 

உங்கள் குழந்தையின் உலகத்தில் கைப்பேசிகளைக் கொடுத்து, இயந்திரமாக மாற்றுவதைக் காட்டிலும் செல்லப் பிராணிகளுடன் பழக விடுவது பல மடங்கு சிறந்தது. 

குழந்தைகளுக்கான செல்லப் பிராணி வளர்ப்பு பற்றியும் அவற்றைப் பராமரிக்கும் அடிப்படை வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம். 

குழந்தைகளிடம் அன்பு, பாசம், கருணை போன்ற குணங்களை வளர்த்தெடுக்க செல்லப் பிராணி வளர்ப்பு தூண்டுகோலாக அமையும். 

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

ஆனால், செல்லப் பிராணிகளை வாங்கிக் கொடுப்பதற்கு முன்பு, அது அவர்களின் வயது, மனநிலை போன்றவற்றுக்கு ஏற்றதா என்பதை யோசித்துப் வாங்குவது முக்கியம்.

அன்பை மட்டுமே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு ஜீவன் இருக்கும் என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் அது நாய் என்று. 

உங்கள் மீது அளவில்லாத அன்பை பொழியும். ஒரு போதும் உங்களை காயப்படுத்தாது. 

வெளியில் செல்லும் போது நீங்கள் அதனுடன் விளையாடிக் கொண்டே இருந்தாலும், உங்களை பாதுகாப்பதிலும் அதனுடைய கவனம் இருக்கும். 

வாலை குழைத்து உங்கள் முகத்தில் தடவுவதில் இருந்து விளையாடுவது வரை நாய்க்குட்டிகளின் அன்பை பார்க்க முடியும். அதே நேரத்தில், உங்களிடம் இருந்தும் அதே அன்பையும், கவனிப்பையும் அது எதிர்பார்க்கும்.

தனக்கு உணவு அளிப்பவர்களிடம் காட்டும் மரியாதையும் அன்பும் தனி ரகம். இதனால், குழந்தைகள் அவற்றின் செயல்களை ரசிக்கத் தொடங்கி விடுவர். 

அவர்களின் சில இயல்புகளான அழுகை, அடம் பிடிப்பது போன்ற பழக்கங்களிலும் மாறுதல் ஏற்படும்.

செல்லப் பிராணியை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை?

உங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு, உங்கள் குழந்தைகளை உணவு அளிக்கப் பழக்கபடுத்துவதன் மூலம், மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை கொண்டு வர முடியும். 

சரியான நேரத்துக்கு உணவு அளிக்கத் தொடர்ந்து பழக்கப்படுத்துவதால், அவர்களிடம் நேர மேலாண்மை மேலோங்கும். இன்றைய பல குழந்தைகள், இணையதளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். 

உயிருள்ள அம்சங்களைவிட உயிரற்ற அம்சங்களுடன் அதிகநேரம் செலவிடுகிறார்கள். இதனால், அவர்களின் கற்பனைத்திறன் பாதிக்கப்படும். மற்ற செயல்களிலும் விருப்பமின்றி இருப்பர். 

இப்படிப்பட்ட குழந்தைகளுக்குச் செல்லப் பிராணி வாங்கிக் கொடுப்பதன் மூலம் நிச்சயம் மாற்ற முடியும். பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது ஒரு மானுட தத்துவம். 

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால், உங்களின் குழந்தை மானுட பாடத்தை நிச்சயம் கற்றுக் கொள்வார்கள்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை:

செல்லப் பிராணியை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை?

5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கே செல்லப் பிராணியை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு அவர்களுக்கு அவற்றிடம்  எப்படிப் பழக வேண்டும் என்ற தெளிவு இருக்காது. 

தங்கள் கோபம், அழுகை போன்றவற்றை சட்டெனப் பிராணிகளிடம் காட்டலாம் என்பதால் கவனம்.

நாய், கிளி போன்றவற்றை நேரடியாகக் குழந்தைகளிடம் கொடுக்காமல், முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். 

அவை கட்டளைகளுக்குப் பணிய ஆரம்பித்த பிறகு  குழந்தைகளின் கவனிப்பில் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கும் போது, செல்லப் பிராணிகளுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். இதனால், தொற்றுக்கிருமிகள் பரவி, குழந்தையின் உடல்நலன் மேலும் மோசமாகும்.

ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

செல்லப் பிராணிகளுக்கு உரிய காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம். குழந்தைகள் நாயின் கழுத்தை கட்டிக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். 

இது போன்ற சமயங்களில் நாயின் செயல்பாடுகள் மாறும் பட்சத்தில், குழந்தையின் முகத்தில் கடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

உங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள் எனில், குழந்தைகள் அதனுடன் நெருகிப்பழகும் அதன் முடி மூச்சுக்குழாய் வழியே உள்ளே சென்று சுவாசக் கோளறுகளை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில், மீனை செல்லப் பிராணியாக அறிமுகப்படுத்தலாம். அதனால் ஆபத்து ஏற்படாது. 

அதன் பிறகு, முயல், அணில் போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். 9 வயதுக்குப் பிறகு நாய் அல்லது பூனையை அறிமுகப்படுத்துவது நல்லது.

செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் போதும் மருந்து தடவும் போதும், கையுறை அணிவது அவசியம். 

பாதிக்கப்பட்ட நாய் உள்ள வீட்டின் தரைப் பகுதியை, மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த கிருமிநாசினியால் அவ்வப்போது கழுவுங்கள்.

பிராணிகளின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். அவை தங்கும் இடத்தைத் தினமும் ஆன்டிசெப்டிக் லோஷன் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது அவசியம்.

செல்லப் பிராணிக்கான படுக்கை

செல்லப் பிராணியை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை?

செல்லப் பிராணிகளுக்கு விதவிதமாக படுக்கைகள் சந்தையில் ஏராளமாக இருக்கின்றன. உங்களின் வசதிக்கு ஏற்ற வகையிலான படுகையை வாங்கி, செல்லப்பிராணியை படுத்து உறங்க வைக்கலாம். 

மெத்தை, தலையணை ஆகியவை நாய்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும். மெத்தையின் மீது ஏறி விளையாடும். கண்களை பறிக்கும் வகையில் மெத்தை மற்றும் படுக்கையின் கலர்களை தேர்ந்தெடுங்கள்.

தீபாவளி பலகாரம் தட்டை முறுக்கு செய்வது எப்படி?

ஸ்பெஷல் டிரிப்

செல்லப் பிராணியை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை?

நாய் பண்ணைகள் இல்லை என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாய் பண்ணை மட்டுமே உங்கள் செல்லப் பிராணிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இடம் அல்ல. 

நாய்களுக்கு தண்ணீரில் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அருகில் இருக்கும் ஆறு, பீச் மற்றும் குளங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மலையேற்றம், வேட்டை ஆகியவையும் பிடிக்கும். 

மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்றால், உங்கள் செல்லப் பிராணியின் மோப்ப சக்தியை உங்களால் கண்டு கொள்ள முடியும். புதிய இடங்களில் மகிழ்ச்சியாக உலவித் திரியும்.

ஒன்றாக உறங்குதல்

செல்லப் பிராணியை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை?

பெரும்பாலும் ஒரே மெத்தையில் செல்லப் பிராணியுடன் பலர் படுத்து உறங்குகின்றனர். அது நாய்க்குட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும். சிலர் கட்டி அணைத்துக் கொண்டு தூங்குகிறார்கள். 

ரிலாக்சாக தூங்குவதையே செல்லப் பிராணிகள் விரும்பும் என்பதால், கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதை தவிர்க்கலாம். 

மைக்ரோ வேவ் அவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

உங்களுக்கு அருகாமையில் கதகதப்பான சூட்டில் படுத்து உறங்குவதையே செல்லப்பிராணிகள் பெரும்பாலும் விரும்பும் என்பதால், இரவு நேரங்களில் அருகில் அவற்றை படுத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.