பிறக்கும் போது ஒரு சிலருக்கு கை அல்லது கால்களில் கூடுதலாக ஒரு விரல் இருப்பது அரிது. இத்தகைய மனிதர்களை பலரும் ஆச்சரியாக பார்த்து வருகிறார்கள். 

ஆறாவதாக சிறு விரல்... சிலருக்கு மட்டும் எதனால் ஏற்படுகிறது !

ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய பிறப்பு குறைப்பாடுகள் இருக்கலாம் எனக் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

வலது கையில் ஆறு விரல் இருந்தால் சுகமான வாழ்க்கை உடையவர்கள் என்றும். இடது கையில் ஆறு விரல் இருந்தால் போராட்ட குணம் அதிகம் உடையவர்கள் என்றும் பலன் கூறப்படுகிறது. 

தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !

இது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் பெரிய குறைபாடு இல்லை என்றபோதிலும் ஆறாவது விரல் குழந்தைகளின் விரல் அமைப்பில் இருந்து வித்யாசமாகத் தெரியும். 

ஆனால், ஹரியானா மாநிலம் பானிபட்டில் பல தலைமுறைகளுக்கு இந்த கை விரல் பிறப்பு குறைபாடு தொடருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 175 நபர்களின் வலது கை அல்லது காலில் கூடுதல் விரல் இருக்கிறது. கிராமம் முழுவதும் அந்த குடும்பத்தினர் தான் ஹாட் டாபிக்.

ஆறு விரலை தனி அடையாளமாக கொண்ட ஹரியானா குடும்பம் !

இது குறித்து குடும்ப தலைவரான சுக்பிர் கூறுகையில், கை அல்லது கால்களில் ஆறு விரல் கொண்ட முதல் தலைமுறை நாங்கள் அல்ல. எனது தாத்தாவுக்கும் கையில் ஆறு விரல்கள் இருந்தன. 

மக்கள் இதை நோயாக பார்க்கின்றனர். ஆனால், நாங்கள் இதனை கடவுளின் கிருபையாக தான் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

சுவாராஸ்யமாக இந்தக் குடும்பத்தின் பெண்களுக்கும் ஆறு விரல்கள் கொண்ட குழந்தைகளே பிறக்கின்றனர். 

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

இது குறித்து டாக்டர் சுக்பீர் கவுர் கூறுகையில், ஆறாவதாக கை அல்லது காலில் விரல் இருப்பது, மிகவும் பொதுவான பிறப்பு குறைபாடு தான். இதனை மருத்துவ ரீதியாக 'பாலிடாக்டிலி' என அழைக்கிறோம். 

இதனை சரி செய்ய வேண்டுமென்றால், அறுவை சிகிச்சை மட்டும் தான் ஒரே வழி. சாதாரணமாக, கைகளில் மூன்று இடங்களில் கூடுதல் விரலை பார்த்திட முடியும்.

சிறிய விரல் பக்கத்தில் - மிகவும் பொதுவானது 

ஆறு விரலை தனி அடையாளமாக கொண்ட ஹரியானா குடும்பம் !

கட்டை விரல் பக்கத்தில், இதனை கட்டை விரல் நகல் என்றும் அழைக்கப்படுகிறது - ஒரு சிலருக்கு மட்டுமே 

கையின் நடுவில் - மிகவும் அரிதானது.

இந்நிலையில், சாதாரணமான பிறவி குறைபாடு மட்டுமே. ஆயிரத்தில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்படுகிறது. 

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக சிறிய விரல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.