கின்னஸ் சாதனை படைக்க பலரும் பலவித சாதனைகளை படைப்பார்கள். ஆனால்  ஒரு நபர், கின்னஸ் சாதனையை படைக்க எடுத்திருக்கும் முயற்சி அசாதாரணமானது என்று சொல்லலாம். 

உடல் எல்லாம் தோடு குத்தி வலம் வரும் மனிதர் !

அப்படி என்ன சாதனை என்று கேட்கிறீர்களா?.. அது தனது உடலில் குண்டூசி அளவு கூட இடம் இல்லாத அளவுக்கு  பச்சைக் குத்தி கொண்டிருப்பது. 

இந்த சாதனைக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை ஜெர்மனியை சேர்ந்த ரோல்ஃப் புச்சோல்ஸ் தான்.

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

பச்சைக் குத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரோல்ஃப் புச்சோல்ஸூக்கு, அந்த ஆர்வம் ஒரு ஒரு கட்டத்தில் வெறியாக மாறி விட்டது. 

அதன் பலன் உடல் முழுக்க பச்சைக் குத்திக் கொண்டதோடு, உடலில் மொத்தம் 453 துளைகளையிட்டு அதில் ஆபரணங்களை பொருத்தியிருக்கிறார். 

இதில் அந்தரங்க உறுப்பில் மட்டும் 278 துளைகள். 61 வயதை. தாண்டிய  ரோல்ஃப் புச்சோல்ஸ் 40 வயதிலிருந்து இதனை செய்து வருகிறார். 

21 ஆண்டுகளாக மேலாக இதனை செய்து வரும் இவர் உதட்டில் 94 இடங்களில் ஆபரணங்களை அணிந்துள்ளார். இது மட்டுமன்றி தலையில் இரண்டு கொம்புகளும் இருக்கிறது. 

விசித்திரமாக மனிதராக வலம் வரும் இவர் தனது பாலியல் வாழ்கையை பற்றி கூறும் போது,  தனது உடலில் மாற்றங்கள் அனைத்தும் வெளியில் மட்டும் தான். 

இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம் !

அது தனது பாலியல் விருப்பத்தையோ, தகுதியையோ அல்லது செயல்படும் திறனையோ மாற்றவில்லை என்றும் இதனால் தனது பாலியல் பாதிக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

உடல் எல்லாம் தோடு குத்தி வலம் வரும் மனிதர் !

ஜெர்மனியில் உள்ள டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரியும் ரோல்ஃப் படுக்கை அறையில் பிரச்னையை சந்திக்காமல் இருந்தாலும், விமான நிலையங்களில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிருக்கிறது என்று கூறுகிறார். 

காரணம் விமான நிலையத்தில் உலோகக் கண்டறிதல் கருவிகள், அவர் அருகில் சென்றவுடனே ஒலிக்கத் தொடங்கி விடுகிறதாம். 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

இவரை பார்க்கும் அதிகாரிகள் அவரை சூனியக்காரன் என்று சொல்லி விடுகிறார்களாம். ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார் ரோல்ஃப்.