பெண்கள் குளிப்பதை ரசிப்பது, ஆடுடன் உறவு.. கல்லூரி மாணவி பலாத்காரம் !

கேரளாவில் ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட அமீருல் இஸ்லாம் ஆடுடன் உடலுறவு வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 
கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்ற 23 வயது இளைஞரை காஞ்சிபுரத்தில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற இடத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். 
விசாரணையில், அந்த கொலைக்குப் பின்னர் சொந்த மாநிலமான அசாம் சென்ற அமீருல் பின்னர், காஞ்சிபுரம் வந்து அங்கு வேலை பார்த்து வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், அமீருல் இஸ்லாம், ஒரு காமக்கொடூரன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்போதும் செக்ஸ் நினைவுடனேயே, அது சார்ந்த நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளான் அமீருல் இஸ்லாம்.

பெரும்பாவூரில் தங்கி இருந்தபோது அங்கு குளிக்கும் பெண்களை மறைந்திருந்து பார்த்து ரசிப்பது இவனது வாடிக்கையாக இருந்துள்ளது. 
அப்படி ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்த போது, சில பெண்கள் இதை பார்த்து விட்டனர். அமீருலை திட்டி அனுப்பியுள்ளனர். அப்போது ஜிஷாவும் இதை பார்த்து சிரித்துள்ளார்.

அமீருல் இஸ்லாம் தங்கியிருந்த பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெண் ஆடு உடன் அவன் உடலுறவு வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

ஆட்டின் மர்ம உறுப்பில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததாலும், ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து, மர்ம உறுப்பை சிதைத்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் போலீசாருக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாம்.
ஆட்டுக்கு ஏற்பட்ட காயங்கள் அமீருல் கொண்ட உடலுறவால் தான் ஏற்பட்டதா என்பதை கண்டறிய திருச்சூரிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த ஆடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து வாய் திறக்க டாக்டர்கள் மறுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஷிஜாவின் தாய் ராஜேஷ்வரி மகள் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். 

கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா ஆஸ்பத்திரிக்கு சென்று இந்த தகவலை ராஜேஷ்வரிடம் தெரிவித்தார்.

சந்தியாவை கட்டி அணைத்து கொண்டு ராஜேஷ்வரி கண்ணீர் விட்டு கதறினார். இதைப்பார்த்து போலீஸ் அதிகாரியான சந்தியாவின் கண்களிலும் கண்ணீர் மல்கியது. 

ஷிஜாவை கொன்ற கொலையாளி சிக்கியது பற்றி கண்ணீருடனும் ராஜேஷ்வரி நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

ராஜேஷ்வரி கூறியது: எனக்கு ஆண் பிள்ளை கிடையாது. இதனால் மகள் ஷிஜாவை மகனை போல வளர்த்தேன். அவளும் எனக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படாதவாறு நல்ல மகளாக நடந்து கொண்டார்.

அவருக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்த பிறகு அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளவே முடியவில்லை.
கொலையாளியை தூக்கில் போட வேண்டும். அப்போதுதான் எனது மகள் ஆத்மா சாந்தியடையும். எனது மனதுக்கும் நிம்மதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

ஷிஜாவின் அக்கா தீபா கூறும்போது, இந்த கொலையில் என்னையே சந்தேகப்பட்டு முதலில் விசாரித்தனர். 

சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு செய்வது எப்படி?

இதனால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு நான் நிம்மதி இழந்தேன். இப்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளதால் எனது தங்கையின் ஆத்மா சாந்தி அடையும் என்றார்.
Tags:
Privacy and cookie settings