இந்தியாவின் பல பகுதிகளில் தற்பொழுது மீண்டும் கொரோனா  பரவல் அதிகரித்து வருகின்றது. அதன்படி தமிழகத்திலும்  சென்னை,கோயம்புத்தூர் உட்பட சில நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. 

கலெக்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு... தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்?

இதனையடுத்து முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும்,  அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காதாரம், வருவாய், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள், நிறுவனங்கள் 

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து மருத்துவத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது அதில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ஏப்ரல் 2வது வாரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக இருந்த நிலையில்,தற்போது 1400 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில்  26 % மக்கள் சந்தைகள், மால்கள் உட்பட பொதுவான இடங்களுக்குச் சென்றதன் மூலம் தொற்றுநோயைப் பெற்றிருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

மேலும் 18 %  பேர் பணியிடங்களிலும்,16 %  பேர் பயணத்தின் போதும், 12 %  பேர் கல்வி நிறுவனம், விடுதி, பயிற்சி மையங்கள் அனைத்திலும்  பாதிப்புக்கள் அதிகமாகி வருகிறது. 

சுகாதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள், நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன் தனிநபர்களை தெர்மல் ஸ்கேன் செய்ய வேண்டும். ஒருவருக்கு அதிக காய்ச்சல் இருந்தால் பரிசோதனை செய்து உடனடியாக  தனிமைப்படுத்தப்பட வேண்டும். 

பணியிடங்களில்  நுழையும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டியது அவசியம். 

அதே நேரத்தில் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.