நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக நேற்றிரவு முதல் செய்திகள் பரவி வருகின்றன. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. 

நடிகை மீனா கணவர் மரணம்... காரணம் இது தான்... வதந்தியைப் பரப்பாதீர்கள் !

தற்போது, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினாலும், தீவிர சிகிச்சையினாலும், கொரோனா தொற்றினால், ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று, நடிகை மீனாவின் கணவருக்கு இதுவரை சரியாகாமல், 

கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை மீனாவின் கணவர், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு நுரையீரல்களுமே பழுதான நிலையில், டோனருக்காக காத்திருந்தார். 

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்து பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மீனா, ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். 

கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 

அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. 

கொரோனா தொற்றினால், நடிகை மீனாவின் கணவர் மரணம் ஏற்படவில்லை. ஆனால், பல இணையதளங்கள் கொரோனா தொற்றினால், மீனாவின் கணவர் இறந்து விட்டதாக தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறித்த அவரது உறவினர்கள் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நீண்ட காலங்களாகவே இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனைக்காக தனியாக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில், கொரோனா தொற்றும் ஏற்பட்டதாக தெரிகிறது.

கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலங்களாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, நுரையீரல் டோனருக்காக பதிவு செய்து, காத்திருந்துள்ளார். இந்நிலையில், நுரையீரல் செயல்படாமல் போகவே எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார்.  

அதன் பின்னர், எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது..

இந்நிலையில் திடீரென நேற்றிரவு 9.30 மணியளவில்  சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.  அவருக்கு வயது 48 .  

இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு வித்யாசாகருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. 

புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய் பாதிப்பினால், வித்யாசாகரின் நுரையீரல் கடும் பாதிப்படைந்துள்ளது என தெரிகிறது. 

நடிகை மீனா கணவர் மரணம்... காரணம் இது தான்... வதந்தியைப் பரப்பாதீர்கள் !

ஏற்கெனவே நுரையீரல்கள் செயல்படாத நிலையில், கொரோனா தொற்றினாலும் அவர் பாதிக்கப்பட்டதால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். நடிகை மீனாவின் கணவர் தீடிரென மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .