தூத்துக்குடியில் மகளே தாயை கொலை செய்த கொடூரம் !

0

தூத்துக்குடி மாவத்தை சேர்ந்தவர்கள் மாடசாமி - முனிய லட்சுமி தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த முனிய லட்சுமி சில ஆண்டுகளாக 17 வயதாகும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். 

தூத்துக்குடியில் மகளே தாயை கொலை செய்த கொடூரம் !
இந்த நிலையில் முனியலட்சுமி வீட்டில் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த முனியலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா?

முனியலட்சுமியின் உடலில் கழுத்தை நெரித்தது மற்றும் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருந்ததால் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 

அப்போது தான் கொலைக்கான காரணத்தை அறிந்து அதிர்ந்து போனார்கள் காவல் துறையினர். 

விசாரணையில் தாய் முனிய லட்சுமியை 17 வயதே ஆன மகள், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. 

மகளுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததால் இதனை தாய் முனியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மகள் ஆண் நண்பர்கள் மூன்று பேர் உதவியுடன் நேற்று நள்ளிரவு தாய் முனிய லட்சுமியின் 

கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் தெரியுமா?

உடனடியாக மகளை கைது செய்த போலீஸார் கொலைக்கு உடந்தையாக இருந்த கண்ணன் மற்றும் தங்கம் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஆண் நண்பர்களுடனான பழக்கத்தை கண்டித்த தாயை பெற்ற மகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings