ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமான சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே.. அறிந்திடாத சுவாரசிய தகவல் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே 1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். 

சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சுழற்பந்து வீச்சாளராக தனது பயணத்தை தொடங்கி 

1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 

சிறுகுடலை விரும்பி உண்ணும் கொரோனா பதர வைக்கும் உண்மை !

பின்னர், 1993 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார். 

அடுத்ததாக, 1993-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வார்னே தேர்ந்தெடுக்கப்பட்டார். 

6 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இவர் ஒட்டு மொத்தமாக 34 விக்கெட்களை கைப்பற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தி ஈர்த்தார்.

மேலும், ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்ற உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியுள்ளார்.

தொடர்ந்து, 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.

ரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் தெரியுமா? எதனால் வருகிறது?

2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முரளிதரனுக்கு அடுத்ததாக ஷேன் வார்னே உள்ளார்.

இத ுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 முறை இவர் 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 

இந்த நிலையில், ஷேன் வார்னே மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியளிப்பதாகவும், என்ன சொல்வது என தெரியவில்லை என விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். 

1,050 கி.மீ நடை பயணம், சாலையோர பிரசவம் - வடமாநில தொழிலாளியின் கதை !

சச்சின் தெரிவிக்கையில், ஷேர் வார்னேவின் மரணம் அதிர்ச்சியும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரை ரொம்பவும் மிஸ் செய்வேன். களத்திலோ அல்லது வெளியிலோ உங்களுடன் ஒருபோதும் மந்தமான தருணம் இருந்ததில்லை. 

ஆன் ஃபீல்ட் மற்றும் ஆஃப் ஃபீல்ட் கேலிக்கூத்துகளை எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவோம். உங்கள் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 

இந்தியர்கள் மனதிலும் உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு எனப் பதிவிட்டுள்ளார். சேவாக் தெரிவிக்கையில், என்னால் நம்ப முடியவில்லை. 

உலகின் தலைச்சிறந்த பவுலரான சூப்பர் ஸ்டார் ஷேன் வார்னே இப்போது இல்லை. வாழ்க்கை மிகவும் பலவீனமானது. 

புரிந்து கொள்வது கடினம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.