எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத கிணறு... காரணத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் !

0

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள திறந்தவெளி விவசாயக் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாமல் இருந்துள்ளது. 

எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத கிணறு... காரணத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் !

விநாடிக்கு 2000 லிட்டர் வீதம் தண்ணீர் செலுத்திய போதும் பல வாரங்களாக நிரம்பாமல் இருந்துள்ளது. 

மேலும் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் நிரம்பிய சிறுகுளத்தின் உபரி நீரும் இந்த கிணற்றுக்கு திருப்பி விடப்பட்டது. 

போக்குவரத்து விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் 6.5 லட்சம் !

ஆனாலும் இந்த கிணறு நிரம்பாமல் இருந்து வந்தது. இதனால் இதை அதிசய கிணறு என்று கிராம மக்கள் அழைத்து வந்தனர். 

இதனை அடுத்து சென்னை ஐஐடி கட்டடப் பொறியாளர் துறை உதவி பேராசிரியர் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது இப்பகுதியில் உள்ள 13 கிணறுகளில் இருந்தும் நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் இதுதொடர்பாக, சென்னை ஐஐடி கருத்துரு ஒன்றை வழங்கியுள்ளது. 

அதில், 'பிளவுபட்ட சுண்ணாம்பு படுகையாக இந்த நிலபரப்பு இருப்பதால், வழக்கமான நீர் படுகைகளை விட நீரியல் கடத்தும் திறன் மிக அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?

இது போன்ற கிணறுகளில் நிலத்தடி நீர் மறு ஊட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், வெள்ளம் மற்றும் வறட்சியின் தீவிரத்தை குறைக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)