மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

0

நம்மில் பலருக்கும் பிடிக்காத பன்றிகள் மிகவும் புத்திக் கூர்மையுள்ள விலங்கு. நாய், பூனைகளை விட மிக எளிதில் பன்றியை செல்லப் பிராணியாக நம்மால் பழக்கிக் கொள்ள முடியுமாம். 

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

பொதுவாக இந்தப் பன்றிகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. பன்றிகளின் முடி தூரிகை செய்ய பயன்படுத்தப்படுகிறது. 

பொதுவாகப் பன்றிகள் சேற்றில் உருண்டு புரண்டு எழுவதையும் சேறு மிகுந்த தண்ணீரில் உடலை புதைத்து தலையை மட்டும் வெளியே வைத்திருப்பதையும் நாம் பார்த்திருப்போம். 

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. பன்றிகளுக்கு வியர்க்காது. ஏனென்றால் அவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் மிகவும் குறைவு. 

பன்றிகளுக்கு வியர்வை சுரப்பிகள் குறைவாக இருக்கும் காரணத்தால் அது தண்ணீரில் இருப்பதன் மூலமாகவோ அல்லது 

சேற்றை தன்னுடைய உடலில் பூசிக் கொள்வதன் மூலமாகவோ தங்கள் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. 

அதுமட்டுமல்லாமல் இந்த சேறு அதனுடைய உடலில் முழுவதும் மூடிக் கொள்வதால் சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகள் தொல்லையிலிருந்து தற்காத்து கொள்கிறது.

ஒரு பன்றி குட்டிக்கு முறையாக நல்ல பயிற்சி கொடுத்தால் இரண்டு மூன்று வாரங்களில் அது தன்னுடைய பெயரை கற்றுக் கொள்ளும். 

பன்றியை நீங்கள் ஒரு பெயரைப் போட்டு அழைத்தால் விரைவில் அது கற்றுக் கொண்டு நீங்கள் அழைக்கும் பொழுது அதற்கு பதில் கொடுத்து உங்களிடம் ஓடி வருமாம்.

புதிதாக பிறந்த பன்றிக்குட்டிகள் தங்களுடைய தாயின் குரலுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஓடி தாயிடம் வருகிறது. 

மேலும் தாய் பன்றிகள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பொழுது தன்னுடைய முணுமுணுப்பு மூலமாக குட்டிகளுடன் தொடர்பு கொள்கிறது.

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

ஒரு பன்றியின் வாசனை உணர்வு மனிதர்களை விட 2000 மடங்கு அதிக உணர்திறன் கொண்டது.மார்ச் ஒன்றாம் தேதி தேசிய பன்றி தினமாக கொண்டாடப்படுகிறது.

பல பன்றிகள் மனிதர்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறது. லக்கி என்ற பன்றி ஒன்று ஒரு பெண்ணையும் அவருடைய மகளையும் அவர்களுடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட பொழுது அதிலிருந்து காப்பாற்றி உள்ளது. 

வியட்னாமில் ஒரு பன்றி மாரடைப்பு ஏற்பட்ட தன்னுடைய உரிமையாளரை காப்பாற்றியிருக்கிறது. 

உரிமையாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சாலையில் சென்று வினோதமாக ஒலியெழுப்பி அவர்களை வரவழைத்து உரிமையாளரை காப்பாற்றியிருக்கிறது. 

ப்ரூ என்ற செல்லப் பன்றி தன்னுடைய உரிமையாளர் சேற்றுப் புதை குழியில் சிக்கிய பொழுது சேற்றுப் புதை குழியிலிருந்து தன் உரிமையாளரை வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளது. 

மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !

தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனையும் பன்றி ஒன்று காப்பாற்றியுள்ளது. பன்றிகள் பொதுவாக குறுகிய தூரத்திற்கு மிக வேகமாக ஓடக்கூடியது. 

ஒரு காட்டுப்பன்றி மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. வீட்டில் வளர்க்கக்கூடிய பன்றி 17 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

முழுமையாக வளர்ந்த பன்றியின் எடை சராசரியாக 125 முதல் 320 கிலோகிராம் வரை இருக்கும்.ஒரு பன்றியின் சத்தம் 115 டெசிபல்கள் வரை எட்டும்.

அண்டார்டிகா தவிர உலகில் உள்ள எல்லா இடங்களிலும் பன்றிகள் வாழ்கின்றன. உலகில் சுமார் 200 கோடி பன்றிகள் உள்ளன.

சீன ராசியில் பன்றி இடம்பெறுகிறது. இது அதிர்ஷ்டம், நேர்மை, மகிழ்ச்சி, ஆண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

பன்றிகளுக்கு அதிக நேரம் ஓய்வெடுக்க பிடிக்கும். மசாஜ் செய்து கொடுப்பதையும் பன்றிகள் விரும்புகின்றது. இசையை கேட்பது, முதுகில் தடவிக் கொடுப்பது பன்றிகளுக்கு பிடித்த விஷயங்கள். 

தங்களுக்கு பிடித்த பொம்மைகளுடன் விளையாடுவதையும் பன்றிகள் விரும்புகின்றன. சூடாக இருக்கவும், ஆறுதலுக்காகவும் பன்றிகள் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று அரவணைத்துக் கொண்டிருக்கும்.

பன்றிகள் குட்டி போடுவதற்கு முன்னால் அழகான வீட்டை கட்டும். குச்சிகள், இலைகள், வைக்கோல் போன்றவற்றை எடுத்து வந்து வசதியான வகையில் கூட்டைக் கட்டுகிறது. 

டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !

நன்றாகப் பராமரிக்கப்படும் ஒரு பன்றி 10 பன்றி குட்டிகளை பெற்றெடுக்கும். வழக்கமாக ஒரு வருடத்திற்கு இரண்டு முறை குட்டிகளை பெற்றெடுக்கும். 

பன்றி குட்டிகள் பிறக்கும் பொழுது சுமார் ஒரு கிலோ அளவிற்கு எடை உள்ளதாக இருக்கும். ஒரு வாரத்திலேயே எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

பன்றிகள் ஒன்றுக்கொன்று அரட்டை அடிக்க விரும்புமாம். ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதற்கு முணுமுணுப்பு மற்றும் ஒரு சில வித்தியாசமான சப்தங்களை எழுப்புகிறது. 

பன்றிகள் குழுக்கள் 20க்கும் மேற்பட்ட வெல்வேறு சப்தங்களை வெளிப்படுத்தியது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பன்றிகளுக்கு நினைவாற்றல் மிகவும் அதிகம். ஒரு விஷயத்தை அவைகளால் பல ஆண்டுகள் வரை நினைவில் வைத்திருக்க முடியும். 

பன்றிகளால் எளிதில் உணவு தேடும் முறைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும். 

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

இதனால் பன்றிகளுக்கு எங்கு அதிகம் உணவு கிடைக்கும், எந்த காலகட்டத்தில் அதிக உணவு கிடைக்கும், அதை எப்படி தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எளிதாகிறது.

பஹாமாஸில் மக்கள் வசிக்காத ஒரு தீவு உள்ளது. இந்தத் தீவில் பன்றிகள் அதிகம் வசிக்கின்றன. பன்றிகள் அதிகம் வசிப்பதால் இந்த தீவு பன்றித்தீவு என அழைக்கப்படுகிறது. 

இந்தத் தீவில் பன்றிகள் கடலில் நீந்துவதையும் விளையாடுவதையும் நீங்கள் கண்டு களிக்கலாம். பன்றி பொதுவாக மூன்றில் இருந்து ஆறு அடி நீளம் வரைக்கும் இருக்கும். 

பன்றிக்கு மொத்தம் 44 பற்கள் உள்ளது. ஆண் பன்றிகளுக்கு கோரை பற்கள் நீண்டு தந்தங்களை உருவாக்குகிறது. 

இந்த பற்கள் தொடர்ந்து வளர்ந்து ஒன்றோடொன்று உரசும் பொழுது கூர்மைப்படுத்தப்படுகிறது.

டைக்ரிஸ் பேசின் காட்டுப் பன்றியிலிருந்து பன்றிகள் வளர்க்கப்பட்டன என தொல்பொருள் சான்றுகள் கூறுகிறது. 

காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?

11 ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய பன்றியின் எச்சங்கள் சைப்ரஸில் கண்டறியப்பட்டுள்ளது. 

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் மீகாங் பள்ளத்தாக்கில் காட்டுப் பன்றிகளை மக்கள் வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

18ம் நூற்றாண்டில் ஆசிய பன்றிகள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகிறது. 

தற்போதைய துருக்கிக்கு அருகில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மக்கள் தங்கள் கிராமங்களில் உணவுக்காக காட்டுப் பன்றிகளை வளர்த்துள்ளார்கள்.

ஆதிகாலத்தில் வேட்டையாடுபவர்கள் மண்ணுக்குள் இருக்கும் உணவுப் பண்டங்களை தேடி எடுப்பதற்காக பன்றிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். 

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

பன்றிகளுக்கு மிகச் சிறந்த வாசனை உணர்வு காரணமாக மண்ணில் இருக்கக் கூடிய கிழங்கு வகைகளை தோண்டி எடுப்பதற்கு பன்றிகளை பயன்படுத்தி உள்ளார்கள். 

ஒரு பன்றி நிலத்தடியில் 13 அடி ஆழத்தில் இருக்கும் உணவைக் கூட தன்னுடைய வாசனை உணர்வால் கண்டுபிடிக்குமாம்.

ரோமானியப் பேரரசர்கள் காளான்களை கண்டுபிடிப்பதற்காக பன்றிகளை பயன்படுத்தி உள்ளார்கள். 

பன்றிகள் தங்களுடைய மோப்பசக்தி காரணமாக மிக வேகமாக காளான்களை கண்டுபிடிக்கிறது. 

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

ஆனால் அதிகம் காளான்களை பன்றிகள் சாப்பிடுவதால் அதன் பிறகு நாய்களை காளான்களை கண்டுபிடிக்க பயன்படுத்தியுள்ளார்கள்.

பன்றிகள் நாய்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலிகளாக கருதப்படுகிறது. நாம் சொல்லிக் கொடுக்கும் தந்திரங்களை மிக விரைவாக கற்றுக் கொள்கிறது.

ஒரு சில நாடுகளில் ஆடுகளை மேய்க்க பன்றிகள் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கேம்களை விளையாட ஒரு சில பன்றிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. 

வீடியோ கேம்களை மிகவிரைவாக கற்றுக் கொண்டு அது விளையாடவும் ஆரம்பிக்கிறது.

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

சமீபத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மனிதனுக்கு பொருத்தி புதிய மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இந்த பன்றியின் இதயமும் மனிதனின் இதயமும் ஏறக்குறைய ஒத்த தோற்றத்தை கொண்டது.

பன்றிகளின் இதய வால்வுகள் மனிதர்களுக்கு பழுதான இதய வால்வுகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இதய வால்வுகள் சுமார் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் தன்மை கொண்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)