பிகார் மாநிலத்தில் உள்ள ஒரே பாறையில் குடைந்த லோமாஸ் ரிஷி குகை !

0

லோமாஸ் ரிஷி குகை பீகாரில் உள்ள ஜெகனாபாத் மாவட்டத்தில் சுல்தான்பூர் எனுமிடத்தில் பராபர் மற்றும் நாகார்ஜுனி மலைகளில் அமைந்துள்ள குடைவரை குகை. 

பிகார் மாநிலத்தில் உள்ள ஒரே பாறையில் குடைந்த லோமாஸ் ரிஷி குகை !

கிமு 3 ம் நூற்றாண்டில் மௌரிய பேரரசர் அசோகர் ஆட்சி செய்த காலத்தில் பௌத்த பிக்குகள் தியானம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பராபர் குகை.

பராபர் குகைகளில் லோமஸ் ரிஷி குகை, சுதாமா குகைகள், விஸ்வகர்மா குகைகள் மற்றும் கரன் சௌபர் குகைகள் உள்ளன. 

பராபர் மலைக் குகைகள் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான பாறைக் குகைகளாகும். இந்த லோம ரிஷி குகையின் முகப்பு குதிரை லாட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

பிகார் மாநிலத்தில் உள்ள ஒரே பாறையில் குடைந்த லோமாஸ் ரிஷி குகை !

இந்த குகைகள் ஒரு ஒற்றை கிரானைட் பாறையில் இருந்து செதுக்கப்பட்டவை. இந்த பராபர் மலை புத்த குகைகளில் ஒரு சில இந்து மற்றும் ஜைன சிற்பங்களையும் நாம் பார்க்க முடியும்.

பராபர் மலை குகைகளிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நாகார்ஜுனி மலைகள் அமைந்துள்ளது. 

இவை இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுவதால் அவை ஒன்றாக சத்கர் என்று அழைக்கப்படுகின்றன.

பிகார் மாநிலத்தில் உள்ள ஒரே பாறையில் குடைந்த லோமாஸ் ரிஷி குகை !

இந்த பராபர் மலை 4 குகைகளை உள்ளடக்கியது. நாகார்ஜுனி மலைகள் மூன்று குகைகளை உள்ளடக்கியது. குகையின் நுழைவாயிலை தாண்டி ஒரு சிறிய சுரங்கப்பாதை காணப்படுகிறது.

சுரங்கப்பாதையை தாண்டி இரண்டு சிறிய அறைகள் உள்ளன. முதலில் ஒரு பெரிய மண்டபம் பக்கவாட்டில் இருக்கிறது. 

இது செவ்வக வடிவில் காணப்படுகிறது. உள்ளே சிறிய அளவில் இரண்டாவது மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேற்கூரைகள் கரடுமுரடாக காணப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)