வீடு என்ற சொர்க்கம் நமது கைகளில் உள்ளது !

0
வீடு என்ற சொல்லுக்கு சொர்க்கம் என்றோர் பொருள் உண்டு. நம் வீட்டை சொர்க்கம் போன்று வைத்திருப்பது நமது கைகளில் தான் உள்ளது. 
வீடு என்ற சொர்க்கம் நமது கைகளில் உள்ளது !
கொஞ்சம் சிரத்தை எடுத்துச் சில செயல்களைச் செய்தாலே, நமது வீடு நம்மை மட்டுமல்ல, வீட்டுக்கு வருபவர்களையும் பரவசப்படுத்தும் இனிமையான இடமாக மாறும்.

1. வீட்டின் அமைப்பை நல்ல ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும் வண்ணங்களால் ஆனதாக மாற்றுங்கள். 

வண்ணங்களுக்கும் நம் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்களை உறுத்தாத, இயல்பான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அடிக்கலாம்.
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்
பொதுவாக, சமையலறை மற்றும் ஹால் மஞ்சள் நிறத்திலும் படுக்கை அறை பச்சை நிறத்திலும் இருப்பது நல்லது.

ஆனால், நிறங்கள் தனிப்பட்ட ரசனை மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப மாறுபடுபவை. 

எனவே, உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்கு அமைதி தரக்கூடிய நிறங்களையே தேர்ந்தெடுத்து அடியுங்கள்.

2. பகலில் மின்சார செலவில்லாமல் காற்றும் ஒளியும் வரும்படி கட்டப்பட்டிருப்பதே நல்ல வீடு என்று சொல்வார்கள். 

இன்றைய நகர நெருக்கடியில் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், வீட்டில் எப்போதும் வெளிச்சமும் காற்றும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஹாலிலும் சமையலறையிலும் வெளிச்சமான ஃப்ளோரோசன்ட் பல்புகளையும், படுக்கை அறையில் சற்றே ஒளி குறைவான விளக்குகளையும் பயன்படுத்தலாம்.

இரவு தூங்கும்போது, நீல நிற ஒளிதரும் ஜீரோ வாட்ஸ் பல்பைப் பயன்படுத்துவது நல்லது. 
தேவையான அளவு காற்றும் வெளிச்சமும் நம்மை எப்போதும் உற்சாகமான மனநிலையில் வைத்திருப்பவை.

3. நம் அழகுணர்வின், நேர்த்தியின் வெளிப்பாடு நம் வீடுதான். எனவே அதை எப்போதும் சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருங்கள். அலங்காரம் என்பது வேறு, ஆடம்பரம் என்பது வேறு.

பொருட்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அந்தந்த இடத்தில் வைத்திருந்தாலே வீடு பளிச்சென அழகாகத் தோன்றும். 

வாய்ப்பு இருந்தால் சித்திரங்கள், கைவினைப் பொருட்கள், கலை வேலைப்பாடுகள் கொண்டு நம் ரசனைக்கேற்ப வீட்டை அலங்கரிக்கலாம்.

4. வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் அமைத்து, அன்றாட உணவுக்குப் பயன்படும் வாழை, தென்னை, கொய்யா, பப்பாளி, முருங்கை போன்ற 

மரங்களையும் வீட்டின் முன்புறம் குளிச்சியான காற்று கிடைக்க வேப்பமரமும் வளர்க்கலாம்.
வீடு என்ற சொர்க்கம் நமது கைகளில் உள்ளது !
அடுக்குமாடிக் கட்டடம் எனில், உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து, மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, அன்றாடம் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்கலாம்.

இயற்கை விவசாயமுறை என்பதால், சத்துக்கள் சேரும். செலவுகள் மிச்சமாகும். 
தோட்ட வேலையில் ஈடுபடும் போது மனதுக்கு இதமானதாக இருக்கும். கலோரிகளும் செலவாகும்.

5. வீட்டை, பசுமை வீடாக மாற்றுவது உங்களை உற்சாகமாகவும், மனநிறைவோடும் வைத்திருக்கும். 

வீட்டுக்குள் ஆங்காங்கே மணி பிளான்ட், பூச்செடிகள் போன்ற குறைந்த வெளிச்சத்தில் வளரும் தாவரங்களை வைக்கலாம்.

அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. இயற்கைக்கும் நமக்குமான நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க… ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும்.

6. வீட்டில் ஒரு முதலுதவிப் பெட்டி கட்டாயம் இருக்கட்டும். சிறுசிறு காயங்களுக்குக் கட்டுப் போட தேவையான பருத்தி பஞ்சு, பேண்டேஜ், டெட்டால் போன்ற கிருமி நாசினி,
உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் !
ஆயின்மென்ட், சாதாரணத் தலைவலி, காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை, தீக்காயத்துக்கு சில்வர் சல்ஃபாடையாசின் ஆயின்மென்ட்,
வயிற்று வலிக்கு டைசைக்லமின், டிரோட்டோவெரின் உள்ள வலி நிவாரணிகள் போன்றவை அதில் இருக்க வேண்டும். 

முதலுதவிப் பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதித் தேதிகளைக் கவனத்தில் கொண்டு மாற்றிக் கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.

7. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சிறிய அலமாரியிலாவது கொஞ்சம் புத்தகங்களை வைத்திருங்கள். 

உங்கள் மனதுக்குப் பிடித்த உங்களின் தொழிலுக்குப் பயன்படக் கூடிய, உங்கள் குழந்தைகளின் நலனுக்கு வித்தாகும் புத்தகங்களை வாங்கி அடுக்குங்கள்.

இரவு படுக்கப் போகும் முன் அரை மணி நேரம், புத்தகம் படிப்பது நம் மனதைப் புத்துணர்ச்சியாக்கும். 

நம் குழந்தைகளுக்கும் வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தூண்டுதலாய் இருக்கும்.
8. வீட்டின் தட்பவெப்ப நிலைக்கும் நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

உங்கள் வீட்டின் நிலவியல் அமைப்புக்கு ஏற்ற சீதோஷ்ணம் வீட்டுக்குள்ளும் இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது.

ஏ.சி இருக்கிறது என்பதால் எந்த நேரமும் ஏ.சியிலேயே இருக்க வேண்டும் என்று இல்லை.

கோடை காலத்தில் ஏ.சியைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. மழைக் காலத்திலும் அதைப் பயன்படுத்துவது 

மின்சார செலவை மட்டுமின்றி உங்கள்  மருத்துவச் செலவையும் கூட்டி ஆரோக்கியத்துக்கு விலை வைத்து விடக் கூடும்.

9. அண்டை வீட்டாருடன் நல்ல சுமுகமான தொடர்பில் இருங்கள். இது இருவருக்குமே பரஸ்பரம் மிகவும் பயனுடையது. 
இதனால், உங்கள் வெளியுலகத் தொடர்பு அதிகரிக்கும். சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் உங்கள் காதுக்கு வரும். 

நீங்கள் வீட்டில் இல்லாத போது, வீட்டின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு ஓரளவு நீங்கும்.
வீடு என்ற சொர்க்கம் நமது கைகளில் உள்ளது !
குழந்தைகளை அண்டை அயலாருடன் பழக அனுமதிப்பது குற்றம் அல்ல. குழந்தைகள் தான் நல்லெண்ணத் தூதுவர்கள். அவர்கள் தான், 

அக்கம்பக்க வீட்டாருடன் சுமுகமான சூழலை விரைவில் ஏற்படுத்துவார்கள். இதனால், குழந்தைகளுக்கும் வெளியுலகத் தொடர்பு கிடைக்கும். 
10. படுக்கையறையில் மெத்தை, தலையணைகள் மிகவும் கடினமானதாகவும் இல்லாமல், மிகவும் லேசானதாகவும் இல்லாமல், 

ஓரளவு இலகுவானதாக, பருத்திப்பஞ்சால் ஆனதாக இருப்பது நல்லது. இதனால் முதுகுவலி, கழுத்துவலி இருக்காது. இடை விழிப்பற்ற சீரான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)