மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !





மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

இந்திய மக்கள் எல்லாருக்கும் தெரிந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்றால் அது அம்பானி மற்றும் ரத்தன் டாட்டா மட்டுமே. 

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !
அம்பானி என்ன தான் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் மக்களின் மனதில் இடம் பிடித்த கோடீஸ்வரர் என்றால் அது நம்ம ரத்தன் டாட்டா தான். 

இவர் என்ன தான் மிகப்பிரிய பணக்காரராக இருந்தாலும் ஏழை மக்களுக்கு உதவுவது என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார்.

83 வயதாகும் ரத்தன் டாட்டா இதுவரை தன் வாழ்வில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !

இதற்கு என்ன காரணம் என்று அண்மையில் பத்திரிக்கையாளர்கள் இவரிடம் கேட்டனர். 

தனக்கும் காதல் வந்தது ஆனால் அது இந்தியா - சீனா யுத்தம் காரணமாக முறிந்து போனதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஹூமன்ஸ் ஆஃப் பம்பாய் என்ற பிரபலமான பேஸ்புக் பக்கத்தில் ரத்தன் கலந்துரையாடினார்.

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !
அப்போது, ரத்தன் டாடா தனது குழந்தை பருவம், காதல் வாழ்க்கை குறித்து பேசினார். தனது காதல் குறித்து ரத்தன் டாடா கூறியதாவது: 

நான் இதுவரை நான்கு பெண்களை காதலித்தேன், அந்த நான்கு காதலும் சில காரணங்களால் கை கூடாமல் போனது. 

இதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று சொன்னார். 

அதுவும் தன்னுடைய முதல் காதல் கதை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அருமையான ஜெல்லி கேக் செய்வது எப்படி?

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

இது ஒரு சிறந்த நேரம், சூழ்நிலை அழகாக இருந்தது. எனக்கு சொந்தமாக கார் இருந்தது. எனது வேலையை நேசித்தேன்.

அந்த நகரில் தான் நான் ஒரு பெண்ணை காதலித்து கிட்டத்தட்ட திருமணம் செய்து கொண்டேன். 

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !

அதே சமயம் சுமார் 7 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத பாட்டியிடமிருந்து விலகி இருந்ததால் குறைந்த பட்சம் தற்காலிகமாக திரும்பி செல்ல முடிவு எடுத்தேன்.

இந்திய சீன போர் தான் இவர்களின் காதலுக்கு தடையாக இருந்துள்ளது. 

அமெரிக்காவில் படித்த ரத்தன் டாட்டா அங்கே ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

கிராமத்துக் கோழிக் குழம்பு செய்வது எப்படி?

அப்போது தன்னுடன் பழகிய ஒரு அமெரிக்க பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

தன்னை வளர்த்த தன்னுடைய பாட்டிக்கு உடம்பு சரி இல்லாமல் போக அவரை பார்க்க இந்தியா வந்துள்ளார்.

நான் காதலித்த பெண் என்னுடன் இந்தியாவுக்கு வருவார் என்று நினைத்தேன். 

ஆனால் 1962 இந்தியா - சீனா யுத்தம் காரணமாக அவளுடைய பெற்றோருக்கு சம்மதம் இல்லை. 

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !

அது ரொம்ப சாதாரண பிரச்சனை தான். ஆனால் இந்த பிரச்சனையை அமெரிக்காவில் பூதாகர பிரச்சனை போல பெருசா பேச ஆரம்பித்தனர். 

இதனால் அமெரிக்காவில் இருந்த இவருடைய காதலி இவரை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

குஜராத்தி சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

பின்னர் வேறொரு நபரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்டார். இதே போல இவருடைய வாழ்க்கையில் நான்கு பெண்களை காதலித்துள்ளார். 

ஆனால் இந்த நான்கு காதலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைகூடாமல் போனது. அதனால் தான் இன்று வரை ரத்தன் டாட்டா திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)