எம்.ஆர்.ஐ ஸ்கேன் யார் யாரை பாதிக்கும்?

0

எம் ஆர் ஐ ஸ்கேன் என்றால் மேக்னடிக் ரெஸொனன்ஸ் இமேஜிங் (தமிழில்... காந்த ஒத்திசைவு படமெடுத்தல்) என்று பொருள். 

எம்.ஆர்.ஐ ஸ்கேன் யார் யாரை பாதிக்கும்?
இந்த பரிசோதனைக்கு உட்பட்டால் காந்த விசை மூலமாக நமது உடல் உள்ளுறுப்புகளில் நோய்ப்பாதிப்பு இருக்குமிடத்தை முப்பரிமாண ஸ்கேன் படமாகப் பெற முடியும். 

1970 ல் கண்டறியப்பட்ட இந்த மெஷின் மக்களின் பயன்பாட்டுக்கு வர மேலும் 7 ஆண்டுகளாகி 1977 முதல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த ஸ்கேன் மூலமாக உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பரிசோதனைக்கு உட்படுத்தி படங்களாக எடுக்க முடியும்.

மூளை மற்றும் தண்டுவடம்

எலும்பு மற்றும் தசை இணைப்புகள்

மார்பகங்கள்

இதயம் மற்றும் இதயத் தமனிகள்

கல்லீரல், கருப்பை, புராஸ்டேட் சுரப்பு உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகள்

போன்ற உடற்பாகங்களில் ஏதேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவற்றை எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையில் மிக எளிதாக முறையாகக் கண்டறிய முடியும்.

எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினின் காந்தவிசை தோராயமாக 10 டன் இது புவியின் காந்த விசையோடு ஒப்பிடுகையில் 30,000 மடங்கு மிகு சக்தி கொண்டது. 

அதுமட்டுமல்ல ஒரு குளிர்சாதனப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள காந்த விசையோடு ஒப்பிடுகையில் 200 மடங்கு வலிமையானது.

எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை விலக்கப்பட்டவர்கள்...

எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை விலக்கப்பட்டவர்கள்

நரம்பியல் நோய் பாதிப்பு உள்ளவர்களிடையே வலி குறைப்பிற்காக நெர்வ் ஸ்டிமுலேட்டர் எனும் எலக்ட்ரிகல் இம்பிளாண்ட் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள்

இதயத் துடிப்பை சீராக வைப்பதற்காக கார்டியோ வெர்ட்டர், டி ஃபைப்ரிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப் படுவதில்லை.

அது மட்டுமல்ல, ஸ்கேன் மெஷினின் உயர் காந்த விசை காரணமாக;

ரிஸ்ட் வாட்சுகள், அலைபேசிகள், தங்கம், வெள்ளியாலான உலோக ஆபரணங்கள், ஹியரிங் எய்டு உள்ளிட்ட உலோகக் கருவிகள், 

உலோகத்தாலான அனைத்துக் கருவிகளுக்கும் எம் ஆர் ஐ ஸ்கேன் அறைக்குள் கண்டிப்பாக அனுமதி இல்லை.

காந்தத்தின் உள்ளே இருப்பதாலோ, வனொலி அதிர் வலைகளைச் செலுத்துவதாலோ பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.

இருதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் (pacemaker) மின்னணு இயந்திரம். அது பொருத்தி யிருந்தால் எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கக் கூடாது. 

எம்.ஆர்.ஐ ஸ்கேன் யார் யாரை பாதிக்கும்?
உடைந்த எலும்புகளை உலோகத் தகடுகள் கொண்டு இணைத்தி ருந்தால் அந்த உலோகத் தகடுகள் காந்த சக்திக்கு உட்படும் 

வகையா (ferro-magnetic alloy) அல்லது உட்படாத வகையா (non-magnetic alloy) என்று தெரிந்து கொண்டு முறையே ஸ்கான் செய்யக் கூடாது அல்லது செய்யலாம்.

ரத்தக் குழாய்களில் அடைப்பை நீக்க வைக்கப்படும் ஸ்டெண்ட்களும் (vascular stent) உலோகக் கலைவை களால் ஆனவை தான் அவற்றிற்கும் மேலே கூறிய விடை பொருந்தும்.

சமீப காலத்தில் பொருத்தப்படும் எலும்பு முறிவு சாதனங்கள் (orthopaedic prosthesis), ஸ்டேன்டுகளில் (stents) எல்லாம் எம்.ஆர்.ஐ ஸ்கான் காந்த்ததினால் பாதிக்கப் படாதவை தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)