மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?

0
இன்றைய நிலையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உச்சி முதல் பாதம் வரை எல்லா மனித உறுப்புகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமையுடன் இருக்கிறது.
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
பலமருத்துவத் துறை நிபுணர்க ளால் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இல்லாமல் சரியான சிகிச்சை கொடுக்கவே முடியாது என்கிற நிலை தான் உள்ளது.

ஆங்கிலத்தில் soft tissues என்று சொல்லப்படும் உடலின் மென் உறுப்புகளையும் (உதாரணமாக மூளை, முதுகுத் தண்டு, கண்கள், இருதயம், ஈரல், கணையம்) 

மற்றும் மூட்டு களையும் (joints), தசைகளையும் (muscles) துல்லியமாகப் படம் பிடிக்க எம்.ஆர்.ஐ. தான் சிறந்த ஸ்கேன் முறை.

கர்பிணிப் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound scan) செய்து குழந்தையின் வளர்ச்சியையும் உறுப்புக்களையும் படம் பிடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 

கருவிலிருக்கும் குழந்தைக்கு உறுப்புகளில் கோளாறு இருப்பின் அதை அல்ட்ராசவுண்ட் ஸ்கானை விடத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் உதவும்.

அண்மையில் சில வருடங்களாகப் பிரபலமா யிருப்பது மூளையின் செயல்பாட்டை ஸ்கேன் செய்யக் கூடிய ஃபங்க்ஷனல் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (functional MRI, also known as fMRI). 

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பெரியதா / நல்லதா அல்லது சி.டி. ஸ்கேன் (CT scan) பெரியதா /நல்லதா?
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
இது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை, மருத்துவத் துறையிலே உள்ள பலருக்கும் உள்ள சந்தேகம். 

பரவலாக சி.டி. ஸ்காணைவிட எம்.ஆர்.ஐ ஸ்கானுக்கு விலை அதிகம், அதானாலையே இந்தக் கேள்வி மக்களின் மத்தியில் பரவி விட்டதோ என்று எனக்கொரு சந்தேகம்.

முதல் கேள்விக்கான பதிலில் நான் குறிப்பிட்டிருந்தேன், இவ்விரண்டு ஸ்கேன்களும் வெவ்வேறு முறைகளை உபயோகித்து உடலைப் படம் பிடிக்கின்றன என்று.

ஒவ்வொரு ஸ்கேன் முறைக்கும் சில பிரத்தியேகமான உபயோகங்கள் உள்ளன. 

உதாரணமாக நுரையீரலை படம் பிடிக்க சி.டி.ஸ்கேன் தான் உசிதம், மூட்டு களினுள்ளே உள்ள மென் தசைகளை (ligaments, tendons) படம் பிடிக்க எம்.ஆர்.ஐ தான் உசிதம். 

சில/பல இடங்களில் இரண்டில் எதை உபயோகித்தாலும் தப்பில்லை (உதாரணம்: மூளை).

பல நேரங்களில் எந்த ஸ்கேன் முறையை உபயோகிக்க லாம் என்பதை அந்த மருத்துவ மனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
முதல் பாகத்தின் பின்னூட்டங்களில் நண்பர்கள் கொத்தனாரும், ஆயில்யனும், “படம் வரைந்துபாகம் குறித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.” என்று கேட்டிருந்தார்கள். 

கீழே மூன்று படங்களை இணைத்துள்ளேன். நான் வரைய வில்லை, தமிழில் பெயர்கள் மட்டும் எழுதினேன். 

மீகடத்திக் காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் தான் உளுந்து வடை (டோன்ட் / donut) உருவத்தில் கான்றியும் (gantry) பீப்பாய் போன்ற நீளமான துவாரமும் இருக்கும் 

இருட்டான சிறிய குகை போல் உள்ள இந்த இடத்தில் படுக்க வைத்து ஸ்கேன் எடுக்கும் பொழுது சிலருக்கு தனிமை மருட்சி (claustrophobia) ஏற்படுகிறது.

பொதுவாக நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங் களில் கான்றி (gantry) அவ்வளவு குறுகலாக இல்லாமல் விசாலமாக இருக்கும். சில இயந்திரங் களில் மூன்று பக்கங்கள் திறந்து இருக்கும். 

இவைகளுக்கு திறந்த வெளி எம்.ஆர்.ஐ (Open MRI) என்றும் பெயர் உண்டு. நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங் களின் காந்த சக்தி 0.5 டெஸ்லா விற்கும் கம்மியாக இருக்கும்.
மீ கடத்திக் காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங் களின் காந்த சக்தி 0.5 டெஸ்லா விற்கும் அதிகமாக இருக்கும். 

காந்த சக்தியை வைத்து பார்த்தால் முறையே 0.2, 0.3, 0.4, 0.5, 1.5 மற்றும் 3 டெஸ்லா அளவில் ஸ்கேன் இயந்திரங்கள் உண்டு. 

இதில் பொது மக்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்கள்: 

காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கேன் இயந்திரத்தில் எடுக்கும் படங்கள் சிறப்பாகவும் துல்லிய மாகவும் இருக்கும்.

காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கேன் இயந்திரத்தில் பரிசோதனையை சீக்கிரமாக முடித்து விடலாம். மக்களுக்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இன்னொன்றும் உண்டு. 
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
காந்த சக்தியை, அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த காந்தங்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதால், ஸ்கேன் செய்யும் அறைக்குள் காந்த சக்திக்கு உட்படக் கூடிய உலோகத்தினால் ஆன பொருள்கள் இருக்கக் கூடாது. 

அவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. அதே போல் மின்னணு சாதனங்களும் (electronic items – கைக்கடிகாரம் /wristwatch, செல்பேசி/ mobile phone, calculator, digital diary, laptop computer, etc) எடுத்துச் செல்லக் கூடாது. 

கடன் அட்டை (credit card) எடுத்துச் செல்லக் கூடாது. உலோகத்தால் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. 
எல்லா ஸ்கேன் மையங்களி லும் ஸ்கேன் செய்வதற்கு முன் இவை எல்லாம் உங்களுக்கு சொல்லப்படும். 

நீங்கள் அணிந்து செல்லும் உடையை கழற்றி விட்டு அவர்கள் தரும் அங்கியைத் தான் உடுத்திக் கொள்ள வேண்டும்.

உடலின் ஒரு பகுதிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சுமார் எட்டிலிருந்து இருபது நிமிடங்கள் ஆகும். 

உதாரணமாக மூளையை படம் பிடிக்க 0.2 டெஸ்லா இயந்திரத்தில் குறைந்த பட்சம் 20 நிமிடம் ஆகும், 1.5 டெஸ்லா இயந்திரத்தில் சுமார் 8 நிமிடம் ஆகும்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து அனுபவப் பட்டவர்களுக்கு இது தெரியும்; படம் பிடித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆனாலும்,  

அவ்வளவு நேரமும் ஒரு துளி கூட அசையாமல் படுத்திருக்க வேண்டும். சிறிது அசைந்தாலும் படம் தெளிவற்று போய் விடும் (blur or movement artifact).
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
தலை வலியுடன் மூளைக்கோ அல்லது முதுகு வலியுடன் முதுகுத் தண்டுக்கோ ஸ்கேன் எடுக்க செல்பவர் 20 – 25 நிமிடங்கள் அசையாமல் படுத்திருப்பது மிகவும் கஷ்டம் என்பதை நான் சொல்ல வேண்டிய தில்லை.

பல தருணங்களில் பரிசோதனை க்கு வந்திருப்பவரால் அசையாமல் படுக்க முடியாது. உதாரணத்திற்கு வலிப்பு (fits, seizures), பக்கவாதம் (Paralysis) உள்ளவர்கள், தலையில் அடிபட்டுள்ள வர்கள், 
சிறு குழந்தைகள். அப்படிப்பட்ட நேரங்களில் நோயாளிக்கு மயக்க ஊசி போட்டு படுக்க வைத்து ஸ்கேன் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

சில சமயங்களில், ஸ்கேன் செய்யப்படும் உறுப்பைப் பொறுத்து, உங்களுக்கு கான்ட்ராஸ்ட்  அல்லது டை (contrast / dye) என்ற மருந்து நரம்பில் ஊசி மூலம் செலுத்த வேண்டியிருக்க லாம். 

கேடோலினியும் (Gadolinium) என்கிற ரசாயனம் உள்ள இந்த மருந்தின் விலை அதிகம். உங்களுக்கு கொடுக்கும் பத்து மில்லி லிட்டர் (10 ml) மருந்தின் விலை சுமார் 1800 – 2000 ரூபாய் ஆகும்.

பொதுவாக இது ஸ்கேன் விலையி லிருந்து அப்பாற்பட்டு கூடுதலாக வசூலிக்கப்படும். ஸ்கேன் விலை என்று பேச்சு வந்து விட்டதால் அதையும் பார்த்து விடுவோம்.

ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சுமார் 5000 ரூபாய் செலவாகும் என்பது இதை படிப்பவர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக் கிறது. 

பொதுவாக ஒரு உடல் அங்கத்திற்கு பரிசோதனை செய்ய மூவாயிரத்தி லிருந்து ஐயாயிரம் ரூபாய் ஆகும். 
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
எம்.ஆர்.ஐ ஸ்கேன் விலை பொதுவாக நிர்ணயிக்கப் படுவது பரிசோதனை செய்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதை வைத்து. 

ஒரே நபருக்கு இரண்டு அங்கங்களுக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால், நேரம் அதிகம் ஆகும் என்பதால், இரண்டு தனி பரிசோதனைக் கான விலை.

தில்லி, மும்பை, சென்னை, பெங்களுரு போன்ற பெரு நகரங்களில் விலை நான் குறிப்பிட்டிருப்பதை விட 
அதிகமாக இருக்கும். ஒருவருக்கு பரிசோதனை முடிக்க அதிக நேரம் ஆனால், ஒரு நாளுக்கு சிலரைத் தான் பரிசோதிக்க முடியும். 

அதனால் சீக்கிரம் படம் எடுக்கக்கூடிய, அதாவது காந்த சக்தி அதிகம் உள்ள எம்.ஆர்.ஐ இயந்திரங் களையே என்னைப் போன்ற ரேடியால ஜிஸ்ட்கள் விரும்புவார்கள்.

இன்றைய நிலையில் உடலின் அனைத்து பாகங்களையும் துல்லிய மாகப் படம் பிடிக்கச் சிறந்தது 1.5 டெஸ்லா இயந்திரம் தான். 

இது தான் நல்ல இயந்திரம் என்றால் ஏன் எல்லா ஊர்களிலும் உள்ள மருத்துவ மனைகள் அல்லது ஸ்கேன் மையங்களில் 1.5 டெஸ்லா இயந்திரம் இருப்பதில்லை என்று கேள்வி எழும். 

இந்த இயந்திரங்கள் எதுவுமே நம் நாட்டில் உற்பத்தி யாவது இல்லை. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன. 
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
புதிதாக வாங்கினால் இவற்றின் விலை 60 லட்சத்தில் இருந்து 8 கோடி ரூபாய் வரை ஆகும். உதாரணத்திற்கு சீனாவில் தயாரிக் கப்படும் 0.2 டெஸ்லா இயந்திரத் திற்கு விலை 60 லட்சம்; 

அமெரிக்கா வில் தயாரிக் கப்படும் 3 டெஸ்லா இயந்திரத் திற்கு விலை 8 கோடி. நான் சிறந்தது என்று கூறிய 1.5 டெஸ்லா இயந்திரத்தின் விலை சுமார் 4 – 5 கோடி ரூபாய்.  
இது போக மாதாமாதம் மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவும் அதிகம் (சுமார் 2 – 3 லட்சம் ரூபாய் ஆகும்). 

குத்து மதிப்பாக சொன்னால் ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து ஸ்கேன் செய்தால் தான் முதலுக்கும், பராமரிப்பிற்கும் நஷ்ட மில்லாமல் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings