குற்றவாளிக்கு வினோத தண்டனை... பெண்களின் துணியை துவைக்க வேண்டும் !





குற்றவாளிக்கு வினோத தண்டனை... பெண்களின் துணியை துவைக்க வேண்டும் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பெண்களின் துணிகளை 6 மாதங்கள் துவைத்து தர வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்து உத்தர விட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிக்கு வினோத தண்டனை
பீகார் மாநிலம் மஜ்ஹோர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லலன் குமார்.. 20 வயதாகிறது.. இவர் ஒரு சலவை தொழிலாளி ஆவர்.. இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறைக்கு சென்ற லலன் குமாருக்கு சமீபத்தில் தான் ஜாமீன் கிடைத்தது. ஆனால் நிபந்தனை ஜாமீன் தரப்பட்டது. 

அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு கிராமத்தில் இருக்கும் 2 ஆயிரம் பெண்களின் துணிகளை துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டுமென்பது தான் அந்த நிபந்தனையாகும்.

லலன் குமார் ஏற்கெனவே சலவை செய்யும் தொழிலாளி என்றாலும், இது அவருக்கு எளிதான வேலையே என்றாலும், 

இலவசமாக 6 மாதத்துக்கு பெண்களின் துணி துவைக்க வேண்டும் என்பதே நிபந்தனையின் சாராம்சம்.

மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 

எனவே, கோர்ட்டின் நிபந்தனை குறித்து மாவட்ட எஸ்பி சந்தோஷ் குமார் சிங் விளக்கமாக எடுத்து சொன்னார். 

இந்த நிபந்தனையை நிறைவேற்ற, அந்த கிராமத்தினர் அனைவரும் இணைந்து, லலன் குமாருக்கு துணி துவைக்க தேவையான சோப் பவுடர்கள், பிரஷ்கள் போன்றவைகளை தந்தனர். 

இதற்கிடையே, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போலீசாரின் விசாரணையும் முடிந்து விட்டது.

வழக்கை முடிக்க இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதயத்துக்கான மருத்துவக் குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள் !

இந்த நிலையில்தான், குற்றவாளி தனது தகுதிக்கேற்ப சமூகப் பணியாற்றுவதாக ஒப்பு கொண்டதை யடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்ல, இவரது சேவையை பார்த்து 6 மாதங்களுக்கு பிறகு, கிராம தலைவர் மற்றும் 

பெண்களின் துணியை துவைக்க வேண்டும் !
அரசு அலுவலர் என 2 பேர் அளிக்கும் சான்றிதழை பொறுத்து தான் இறதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த கிராமத்தின் தலைவர் நசிமா கத்தூன் இதை பற்றி சொல்லும் போது, இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு. 

பல்லுக்கு மருத்துவ குறிப்புகள் தெரிந்து கொள்ள !

இந்த உத்தரவால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். 

இந்த உத்தரவால் கிராமத்தின் பெருமையும், பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்" என்றார் என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)