இந்த ரயில்ல பயணம் செய்யனும்னா 17 லட்சம் கட்டணம்... கொடுக்கனுமாம்?

0

இந்திய ரயில்வே உலகிலுள்ள மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். 

இந்த ரயில்ல பயணம் செய்யனும்னா 17 லட்சம் கட்டணம்... கொடுக்கனுமாம்?
சாதாரணமாக பயணம் செய்ய ரயில்களில் சாதாரண பெட்டி, இருக்கை வசதி கொண்ட பெட்டி, தூங்கும் வசதி கொண்ட பெட்டி, 

குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, குளிர்சாதன வசதியில் முதல் வகுப்பு எனப்படும் விலையுயர்ந்த விஐபிக்கள் செல்லும் சொகுசு பெட்டி என 

பயணிகள் பயணிக்க பல வகையான வசதிகளுள்ள பல வகையான ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே இயக்குகிறது.

வெயிலால் வரும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான இயற்கை வைத்தியம் !

அதிலும் ஒருபடி மேலே போய் மிகவும் ஆடம்பரமான சொகுசு வசதிகள் கொண்ட ரயில்கள் உள்ளன. இதில் பயணம் செய்ய நீங்கள் கொஞ்சம் அதிகம் செலவளிக்க வேண்டும். 

மிக அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் தங்கத் தட்டில் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு இயக்கப்பட்ட இந்த ரயில் முதன் முறையாகத் தென் மாநிலங்களுக்கு வருகிறது.

மிகவும் ஆடம்பர வசதி கொண்ட மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

மகாராஜா எக்ஸ்பிரஸ்

மகாராஜா எக்ஸ்பிரஸ்

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற மகாராஜா விரைவுரயில் என்கிற சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி மூலம் இந்தியாவில் இயக்கி வருகிறது.

இந்த ரயிலில் 7 நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும். 

பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் !

இது இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும் 12 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை உள்ளடக்கி பயணிக்கிறது.

ராஜஸ்தானை மையமாகக் கொண்டு இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மத்திய மாநிலங்களான ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரம் வழியாக பயணிக்கிறது. 

மகாராஜாவின் அமைப்பு

மகாராஜா எக்ஸ்பிரஸ் அமைப்பு

இந்த ஆடம்பர ரயில் சேவை மார்ச் 2010 இல் தொடங்கப்பட்டது. மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள அதிநவீன வசதி கொண்ட 23 ரயில் பெட்டிகள் உள்ளன. 

இதன் மொத்த நீளம் அரை மைல் இருக்கும். அதில் தங்குமிடம், சாப்பாட்டு அறை, பார், லவுஞ்ச், ஜெனரேட்டர் மற்றும் ஸ்டோர் கார்கள் போன்றவை உள்ளன.

நம் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள யோகா செய்யுங்கள் ! 

இதில் மொத்தம் 88 விருந்தினர்கள் பயணம் செய்யலாம் இதற்காக 14 விருந்தினர் பெட்டிகள் உள்ளது. 20 டீலக்ஸ் கேபின்களும், 18 ஜூனியர் சூட்களும், 1 பிரஸிடென்ஷியல் சூட்டும் அடங்கும்.

இதன் குறிப்பிடும் படியான அம்சங்களாக அனைத்து கேபின்களிலும் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, வைப்ஃபை, அட்டாச்சிடு பாத்ரூம், சாட்டிலைட் சேனல்கள் 

மற்றும் டி.வி.டியுடன் எல்சிடி தொலைக்காட்சிகள், தொலைபேசி, ரெஸ்டாரன்ட்கள், பார், விளையாட்டரங்கம் போன்றவை உள்ளன.

படுக்கை வசதிகள்

மகாராஜா எக்ஸ்பிரஸ் படுக்கை வசதிகள்

இந்த ரயிலினுள் வாட்டர் ஃபில்டர் செய்யும் பிளாண்ட் ஒன்றும் உள்ளது.டீலக்ஸ் கேபின்கள் பிரிவில் 5 பெட்டிகள் உள்ளன, மொத்தம் 20 கேபின்கள் 40 பயணிகள் பிரயாணம் செயலாம்.

இதில் 12 இரட்டை படுக்கை அறைகள் மற்றும் 8 இரட்டை படுக்கை அறைகள் உள்ளன). ஜூனியர் சூட்ஸ் பிரிவில் மொத்தம் 18 கேபின்கள் உள்ளன, இதில் 36 பயணிகள் தங்கியுள்ளனர்.

(12 இரட்டை படுக்கை அறைகள் மற்றும் 6 இரட்டை படுக்கை அறைகள் உள்ளன). கூடுதலாக, நான்கு அறைத் தொகுதிகள் உள்ளன. இங்கு விசாலமாக உட்காரவும் தூங்கவும் இடங்கள் உள்ளன. 

தலைவலியை போக்கும் அருமருந்து வெந்நீர் !

உட்கார்ந்து சாப்பிடும் அறை, ஒரு மாஸ்டர் படுக்கையறை மற்றும் ஷவர், பாத் டப்புடன் கூடிய குளியலறை, இரட்டை படுக்கையறை மற்றும் குளியலறையை உள்ளடக்கியது.

மகாராஜா எக்ஸ்பிரஸ் பிரசிடென்ஷியல் சூட் வணிக ரீதியான பயன் பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட உலகிலேயே இதுபோன்ற முதல் ரயில் வண்டி ஆகும்.

சாப்பாட்டு கோச்சுகள்

மகாராஜா எக்ஸ்பிரஸ் சாப்பாட்டு கோச்சுகள்

இந்த ரயிலில் இரண்டு சாப்பாட்டு கோச்சுகள் உள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு நேரத்தில் 42 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடலாம். 

இதனால் அனைத்து விருந்தினர்களும் ஒன்றாக உணவருந்துகிறார்கள்.

இந்த ரயிலில் பலவகையான உணவு வகைகளை வழங்க வடிவமைக்கப்பட்ட அதிநவீன சமையலறை கோச் உள்ளது. 

உணவகங்களுக்கு ரங் மஹால் மற்றும் மயூர் மஹால் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மயூர் மஹால் எனப்படும் தி பீக்காக் ரெஸ்டாரண்ட் மயில் அலங்காரத்தில் உள்ளது. 

குண்டான உடம்பை குறைக்கும் மருந்து பூண்டு !

உணவக மெனுவில் சீன மற்றும் சர்வதேச உணவு வகைகளுடன் பாரம்பரிய இந்திய உணவு வகைகளும் அடங்கும்.

ஒரு பிரத்யேக பார் காரேஜ் ராஜா கிளப், ஒயின்கள், மதுபானங்கள், பீர்கள் மற்றும் ஸ்நாக்ஸ் களை வழங்குகிறது 

நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் போர்டில் உள்ள பானங்கள் அடங்கும், பட்டியலில் வழங்கப்படும் பானங்கள் ஐ.எம்.எஃப்.எல் (இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் கிடைக்கும்.

நீங்கள் தங்கும் இடத்திலிருந்து சாப்பிடும் உணவு படுக்கை குளியலறை மற்றும் கழிவறை என அனைத்தும் மிகவும் தரமாகவும் அழகாகவும் இருக்கும்

பிராயணத் திட்டங்கள்

மகாராஜா எக்ஸ்பிரஸ் பிராயணத் திட்டங்கள்

மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 5 பிராயணத் திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா, இந்தியன் ஸ்ப்லென்டர், இந்தியன் பனோரமா, டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா, ஜெம்ஸ் ஆஃப் இந்தியா என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் அரண்மனைகள், கோட்டைகள், உலகப் புராதனச் சின்னங்கள், பாலைவனங்கள், விலங்குகள், ஆன்மிக மையங்கள், மலைகள் என்று இந்தியாவின் கலாச்சாரத்தையும், 

தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !

பாரம்பரியப் பெருமைகளையும், இயற்கை வனப்பையும் அணு அணுவாக பயணிகள் ரசித்து மகிழலாம்.

ரயிலின் உள்ளிருந்து கொண்டே இந்தியாவின் பரந்த அழகான நிலப்பரப்பை நீங்கள் அழகாக கண்டுகளிக்கலாம். இந்த ரயில் இரவில் மிதமான வேகத்தில் பயணிக்கிறது 

விருந்தினர்களுக்கு எந்த வித சலனமும் இல்லாமல் மற்றும் தாஜ்மஹால், ரணதம்போர் தேசிய பூங்கா, பிகானேர், வாரணாசி, ஜெய்ப்பூர் 

மற்றும் பல சுற்றுலாத் தலங்களில் பயணிகளுக்கு பகல் பயணங்களுக்கு செல்ல அனுமதிக்கிறது.

இந்த ரயிலில் உள்ள ஊழியர்கள் எப்பொழுதும் சேவை செய்யும் விதத்தில் நட்புடனும் விருந்தாளிகளை கவனிக்கிறார்கள். உங்களுக்கான எந்த ஒரு உதவியையும் நீங்கள் உடனே பெறலாம்.

மேலும் ஒரு அனுபவமிக்க சுற்றுலா இயக்குனர் பயணிகளின் உல்லாசப் பயணங்களை மேற்பார்வை இடுகிறார். 

வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஆழமான தகவல்களை அவர்களுக்கு வழங்குகிறார்.

தென் மாநிலங்களுக்கு

இந்த ரயில்ல பயணம் செய்யனும்னா 17 லட்சம் கட்டணம்... கொடுக்கனுமாம்?

திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை ஒன்றாம் தேதி புறப்படும் இந்த ரயில் காரைக்குடி, செட்டிநாடு, சென்னை, மைசூர், கோவா வழியாக மும்பை வரை செல்கிறது.

இதற்கான கட்டணம் லட்சக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் கேபின் கட்டணம், ரூ. 5,00,680 ஆகும். 

இதே போன்று, ஜூனியர் சூட் வகுப்புக்கு ரூ.7,23,420, சூட் வகுப்புக்கு ரூ.10,09,330 என்றும், பிரசிடென்சியல் சூட் வகுப்புக்கு ரூ.17,33,410 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

ஒருவருக்கு இந்தக் கட்டணம் செலுத்தினால் உடன் வரும் ஒருவர் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணிக்கலாம். 

இதில் ரயில் கட்டணம், எட்டு நாட்களுக்கான உணவுக் கட்டணம், வழியில் நட்சத்திர விடுதிகளில் 

தங்கும் கட்டணம், சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பேருந்தில் செல்லும் கட்டணம், நுழைவுக் கட்டணம் ஆகிய அனைத்தும் அடங்கும்.

இந்தியன் ஸ்ப்லென்டர் :

இந்தியன் ஸ்ப்லென்டர்

பயணகாலம்: 6 இரவுகள் 7 பகல்கள்

இது டெல்லியிலிருந்து புறப்பட்டு ஆக்ரா வழியாக ரணதம்போர் என்னும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஜெய்ப்பூர் வழியாக பிகானேர் வந்து ஜோத்பூர் வழியாக உதைபூர் சென்றடைகிறது. 

அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பலசினோர் வழியாக மும்பையை வந்தடைகிறது.

இந்தியன் பனோரமா :

பயணகாலம்: 6 இரவுகள் 7 பகல்கள்

இந்தியன் பனோரமா ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டு ஜெய்ப்பூர் வழியாக ரணதம்போர் என்னும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஃபதேபூர் சிக்ரி வழியாக ஆக்ரா வந்து குவாலியர் வழியாக ஓர்சா வந்தடைகிறது. 

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

பின் அங்கிருந்து கஜுராஹோ வழியாக வாரணாசி சென்று லக்னோ வழியாக டெல்லியை அடைகிறது.

ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா :

ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா

பயணகாலம் : 6 இரவுகள் மற்றும் 7 பகல்கள்

இது மும்பையிலிருந்து ஆரம்பித்து அஜந்தா வழியாக உதைபூர் சென்றடைந்து பின் ஜோத்பூர் வழியாக பிகானேர் சென்றடைகிறது. 

அதன் பின் ஜெய்ப்பூர் வழியாக ரணதம்போர் என்னும் இடத்தை அடைந்து ஃபதேபூர் சிக்ரி வழியாக ஆக்ரா சென்றடைந்து டெல்லியை அடைகிறது .

பள்ளிபாளையம் காளான் பிரை செய்வது எப்படி?

டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா :

இதனுடைய பயணகாலம் 3 இரவுகள் 4 பகல்கள் ஆகும். 

டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டு ஆக்ரா வழியாக சவாய் மாதோபூர் வந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லியை அடைகிறது.

ஜெம்ஸ் ஆஃப் இந்தியா :

ஜெம்ஸ் ஆஃப் இந்தியா

இந்த ரயில் டெல்லியில் இருந்து ஆரம்பித்து ஆக்ரா வழியாக ரணதம்போர் என்னும் இடத்தை அடைந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லியை வந்தடைகிறது.

இவ்வளவு சிறப்புகள் இருந்தால் இதன் கட்டணமும் அதிகமாத் தானே இருக்கும். 

இந்த ரயிலில் நீங்கள் பயணிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் நீங்கள் 2 லட்சத்திற்கும் அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். 

விநாயகர் சதுர்த்திக்கு ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி? 

அதிக பட்சமாக 17 லட்சம் வரை கட்டணம் இருக்கும். ஜிஎஸ்டி அடுத்து தனியாக விதிக்கப்படும். 

இந்த கட்டணத்திற்கு உங்களுக்கு பல வசதிகள் கிடைக்கும், மருத்துவ வசதிகள், சுற்றுலாத் தலங்களை சுற்றிக்காட்டி விளக்க சுற்றுலா கைட், சுற்றுலா இடங்களில் உள்ள நுழைவுக் கட்டணம், 

இந்த ரயில்ல பயணம் செய்யனும்னா 17 லட்சம் கட்டணம்... கொடுக்கனுமாம்?

கேமரா கட்டணம், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போக்குவரத்துக்கு வசதிகள், அனைத்து வகையான உணவுகள் மற்றும் மதுபானங்கள் இவை அனைத்தும் அடங்கும்.

கூடவே ராஜ மரியாதையை அளிக்கப்படும். தி வேர்ல்ட் ட்ராவல் அவார்டில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் 2012, 2013, 2014,2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 

விநாயகர் சதுர்த்திக்கு வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி?

தொடர்ச்சியாக 7 முறை உலகின் முன்னணி சொகுசு ரயில்” என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் 2011 ஆம் ஆண்டில் கான்டே நாஸ்ட் டிராவலர்ஸ் ரீடர் சாய்ஸ் டிராவல் விருதில் சிறப்பு ரயில் ஆபரேட்டர்கள் பிரிவில் முதல் ரன்னர் அப் விருதையும் பெற்றது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)