இந்திய பெண்ணுக்கு துபாயில் அடித்த ஜாக்பாட் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் !

0

ஷார்ஜாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இல்லத்தரசி சுகந்தி என்பவர், துபாய் டியூட்டி ஃப்ரீ லாட்டரி குலுக்கலில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை பெற்று அசத்தியுள்ளார்.

இந்திய பெண்ணுக்கு துபாயில் அடித்த ஜாக்பாட் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் !
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் பி இல் நடைபெற்ற துபாய் டியூட்டி ஃப்ரீ 

மில்லினியம் மில்லியனர் குலுக்கலில் சுகந்தி 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இவருடைய முழு பெயர் சுகந்தி மகேஷ் பிள்ளை. வயது 40. மிலினியம் மில்லியனர் சீரிஸ் 369 ல் டிக்கெட் எண் 1750 இவரால் வாங்கப்பட்டிருந்தது.

சுகந்தி பெயரில் அவரது கணவர் மகேஷ், செப்டம்பர் 1 ஆம் தேதி தி ஐரிஷ் கிராமத்தில் இந்த லாட்டரியை வாங்கி இருந்தாராம். 

துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார் மகேஷ். 

இதனிடையே, 10 இந்தியர்கள் மற்றும் ஒரு லெபனான், ஒரு பிலிபைன்ஸ் நாட்டுக்காரருடன் டிக்கெட்டை பகிர்ந்திருந்ததாக சுகந்தி கூறியுள்ளார். 

அதாவது அனைவருக்கும் பரிசுத் தொகை பங்களிக்கப்படும். 2013ம் ஆண்டு முதல் இந்த தம்பதிகள் துபாயில் வசித்து வருகிறார்கள். 

இது குறித்து சுகந்தி மேலும் கூறுகையில், துபாய் இப்போது எங்கள் வீடாக மாறி விட்டது. இந்த பரிசை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் சுகந்தி தம்பதியின், குடும்பம், மும்பையில் வசிக்கிறது. 

துபாயில் நடைபெற்ற மில்லினியம் மில்லினியர் லாட்டரி குலுக்கலில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை வென்ற 183வது இந்தியர் இவர். 

பொதுவாக இந்தியர்கள் தான் இந்த லாட்டரியை அதிகம் வாங்கி வரும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த குலுக்கல் 1999ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லினியம் மில்லியனர் தொடர் 368 இல் டிக்கெட் எண் 4548-என்பதற்காக, 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற ரெசா டோல், 

மில்லினியம் மில்லியனர் புரமோஷன் தொடங்கியதில் இருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற, 8வது ஆஸ்திரேலிய நாட்டவர் ஆவார். 

அவர் துபாய் டியூட்டி ஃப்ரீயில் இரண்டாவது முறையாக வெற்றியாளராகினார். அவர் முன்னர் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி (கேமல் லினன்) காரை வென்றார்,

வெற்றிக்கான சம்பிரதாய காசோலையைப் பெற்றவுடன், அவர் கூறுகையில், "நான் பல வருடங்களாக துபாயில் வேலை செய்து வருகிறேன். 

நான் ஒரு நாள் இந்த பெரிய வெற்றியை பெறுவேன் என்று நினைத்ததில்லை. துபாய் டியூட்டி ஃப்ரீக்கு நன்றி. இவ்வாறு அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் பிரிட்டிஷ் நாட்டவர் ஜொனாதன் ஹர்லாக், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 53 4 எம் ஏஎம்ஜி (இரிடியம் சில்வர்) காரை வென்றார்.

இந்திய பெண்ணுக்கு துபாயில் அடித்த ஜாக்பாட் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ! 

டிக்கெட் எண் 0172 ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 1783 இல், அவருக்கு இந்த பரிசு கிடைத்தது. செப்டம்பர் 4 ஆம் தேதி துபாயில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற போது இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

அபுதாபியில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனசேகர் பாலசுந்தரம், இரண்டு வாரங்களில் இரண்டு பைக்குகளை டிடிஎஃப் டிராவில் வென்றுள்ளார். 

அவர் ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்ஸ்டர் 48 எட்டு எக்ஸ்எல் 1200 எக்ஸ் (விவிட் பிளாக்) மோட்டார் பைக்கை வென்றார். 

ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 469 இல் டிக்கெட் எண் 0146 டிக்கெட்டை செப்டம்பர் 2 அன்று ஆன்லைனில் வாங்கி இந்த பரிசை அவர் வென்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)