கொல்கத்தா சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. 

அடிபட்ட காலுடன் விளையாடிய டு பிளசிஸ்... களத்தில் நடந்தது என்ன?
ஆனால் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. சிஎஸ்கே பவுலர்கள் எல்லோருமே இன்று சிறப்பாக பவுலிங் செய்தனர்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டு பிளசிஸ் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்தார். 

முதலில் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலேயே மிட் ஆப்பிற்கும் எக்ஸ்டிரா கவருக்கும் இடையில் கேட்ச் கொடுத்தார். அதை பிடிக்க வேகமாக ஓடி வந்த டு பிளசிஸ், தாவி விழுந்து பந்தை மிஸ் செய்தார். 

அதன்பின் அடுத்த ஓவரிலேயே வெங்கடேஷ் ஐயர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

முந்தைய ஓவரில் வெங்கடேஷ் கேட்ச் கொடுத்த போது அதை பிடிப்பதற்காக டு பிளசிஸ் கஷ்டப்பட்டு தாவினார். 

இதில் அவரின் காலில் அடிபட்டது. முக்கியமாக முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டது. விரலிலும் காயம் ஏற்பட்டது.

இதில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ரத்தம் வந்தது. இதனால் டு பிளசிஸ் பேண்ட் முன்பக்கத்தில் சிவப்பு நிறமாக மாறியது. 

குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

முட்டி பகுதியில் சிவப்பாக மாறி ரத்தம் வெளியே தெரிய தொடங்கியது. ஆனாலும் டு பிளசிஸ் தொடர்ந்து கவலையின்றி ஆடினார். 

அடிபட்ட காலுடன் விளையாடிய டு பிளசிஸ்... களத்தில் நடந்தது என்ன?

வாட்சன் மும்பைக்கு எதிரான ஐபிஎல் பைனலில் இதே போல் தான் காலில் ரத்தம் வர வர ஆடினார்.

பேண்ட் முழுக்க சிவப்பாக மாறியும் அவர் அதிரடியாக ஆடினார். இன்று அதேபோல் டு பிளசிஸ் காலில் ரத்தம் வந்தும் ஆடினார். 

மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் !

அதோடு அவர் ஹசல்வுட் ஓவரில் இயான் மோர்கன் அடித்த பந்தை சிக்ஸர் லைனலில் வைத்து சிறப்பாக கேட்சும் பிடித்தார். 

காலில் காயம் ஏற்பட்ட பின்பும் அவர் ரத்தம் வந்ததை பற்றியும் கவலைப்படாமல் இந்த கடினமான கேட்சை பிடித்தது பலரையும் வியக்க வைத்தது.