ஆப்கானிஸ்தானில் நான்கு கடத்தல் காரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைத் தாலிபான்கள் கிரேன்களில் தொங்க விட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 பேரை கொன்று தொங்கவிட்ட தாலிபான்கள்.. பயங்கரம் !
ஆப்கனில் இருந்நது அமெரிக்கப் படைகள் வெளியேற பிறகு இப்போது தாலிபான்களின் ஆட்சியே அங்கு நடைபெற்று வருகிறது. 

அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். 

முன்பு இருந்த ஆட்சியைப் போல இருக்காது என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு ஆட்சியாகவே இது இருக்கும் என்றும் தாலிபான்கள் கூறி வருகின்றனர். 

குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆனால், தாலிபான்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது மற்றொன்றாகவுமே உள்ளது. அங்கு பல்வேறு இடங்களிலும் கடுமையான சட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப் பட்டுள்ளது. 

அதே போல பெண்களுக்கு புர்கா கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. புர்கா அணியாமலும் ஆண் துணை இல்லாமலும் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு செயலை தாலிபான்கள் செய்துள்ளனர். 

அதாவது ஹெராட் என்ற நகரில் 4 இளைஞர்களைக் கொன்ற தாலிபான்கள், அவர்களது உடலை கிரேனின் பின் பக்கம் தொங்க விட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் அந்த கிரேன்களை நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் 4 பேரும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களது உடல்களை இப்படி பொது இடங்களில் தொங்க விடுவது 

வீட்டிலேயே கழுத்து வலியை குணமாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க !

மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று ஹெராட் நகரின் துணைநிலை ஆளுநர் மவ்லவி ஷிர் அகமது முஹாஜிர் தெரிவித்துள்ளார்.

அந்த 4 பேரின் உடல்கள் கிரேனின் பின் பகுதியில் தொங்குவது போன்ற படங்களைத் தாலிபான்கள் இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். 

4 பேரை கொன்று தொங்கவிட்ட தாலிபான்கள்.. பயங்கரம் !
இந்த போட்டோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பல வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. 

அதில் ஒரு வீடியோவில் கொலை செய்யப்பட்டுத் தொடங்க விடப்பட்ட நபரின் கழுத்தில் அட்டை ஒன்று தொடங்க விடப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்வது எப்படி?

அதில் 'கடத்தல்காரர்கள் இப்படி தான் தண்டிக்கப் படுவார்கள்' என்று எழுதப் பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 1996-2001 காலகட்டத்திலும் தாலிபான்கள் இதே போலவே குற்றம் சாட்டப்பட்டோரைக் கொலை செய்து பொது இடத்தில் தொங்க விடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தனர்.

முந்தைய ஆட்சியில் இருந்து கொடூரங்கள் இந்த முறை இருக்காது என்று ஒரு புறம் சொல்லி விட்டு, மறுபுறம் மீண்டும் தாலிபான்கள் அதையே செய்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து ஹெராட் நகரின் துணைநிலை ஆளுநர் மவ்லவி ஷிர் அகமது முஹாஜிர் கூறுகையில், 

சனிக்கிழமை அதிகாலை ஒரு தொழிலதிபரும் அவரது மகனும் கடத்தப் பட்டதாகப் பாதுகாப்புப் படையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. 

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா !

இதில் தாலிபான்கள் துரிதமாகச் செயல்பட்டதில், வெறும் சில மணி நேரங்களில் கடத்தப் பட்டவர்கள் மீட்கப்பட்டனர். 

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரர்கள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

4 பேரை கொன்று தொங்கவிட்ட தாலிபான்கள்.. பயங்கரம் !

இது இஸ்லாமிய நாடு. இங்கு யாரும் யாரையும் காயப்படுத்தக் கூடாது. கடத்துவது மிகப் பெரிய குற்றம். அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் எங்கு இது போன்ற குற்றங்கள் நடைபெற்றாலும் இதே போன்ற கடுமையான தண்டனை வழங்கப்படும் மற்றவர்கள் யாரும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. 

அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு !

அவர்களை எச்சரிக்கும் வகையிலே இப்படி பொது இடங்களில் சடலங்கள் தொங்க விடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

மேலும். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.