யோகா என்பது உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். யோகா எனும் பயிற்சி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. 

உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளனர். 

நம்மில் பலரும் இன்று யோகாவுடன் நாட்களை தொடங்குகின்றனர். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் அதிக விழிப்புணர்வு உள்ளது.

கீமா மட்டன் உருண்டை கறி செய்வது எப்படி?

யோகா செய்வதினால் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். 

யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கோட்பாடு அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முழுவதும் உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. 

யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். 

செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொருத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம்.

உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். 

உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. 

சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

கிட்னியை கவனியுங்கள் மருத்துவக் குறிப்புகள் !

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு போன்றவற்றை வளர்க்க முடியும். 

மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மன இறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். 

உடலின் இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது. தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது. சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா
தேவைற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது.இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு வகைகளை (பாஸ்ட்புட்) தவிர்க்க வேண்டும். 

உணவு உண்டபின் யோகா செய்யக்கூடாது. யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். 

தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது. 

மாணவர்களே பருப்பொருள் என்றால் என்ன?

உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் யோகாவை தங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே செய்து வருகிறார்கள். 

இதைத் தவிர்த்து மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களும் கூட மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாவை பின்பற்ற சொல்கிறார்கள். 

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த ஏதேனும் சம்பவங்கள் உங்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கினால் அதை யோகா பயிற்சி செய்வதின் மூலமாக நாம் குணப்படுத்தலாம்.

எதிர்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை நினைத்து அல்லது உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுவதால் ஏற்படுவதே மனப்பதற்றம். 

உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா

இதைப் போக்குவதற்கு நாம் யோகாவை சரியாக பயன்படுத்த வேண்டும். 

யோகா உங்கள் மனதில் உள்ள அனைத்து பிரச்சினையையும் தீர்க்க உதவியாக இருக்கிறது என்று ஏராளமான ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கோடை காலங்களில் உண்டாகும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கும் மற்றும் அதீத உழைப்பினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் நாம் யோகாவை தினமும் காலையில் செய்ய வேண்டும்.

கோப்பையில் சூடாக ஊற்றும் தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி?

நாம் எப்படி நம் உடல் உஷ்ணத்தை சமமாக வைத்துக் கொள்கிறோமோ அப்பொழுது தான் நம்முடைய ஆரோக்கியமும் தீர்மானிக்கப் படுகிறது.

உங்கள் உடலையும் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தையும் சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள யோகா பயிற்சி மிகவும் அவசியம். 

உங்கள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சரியாக செலுத்த யோகா பயிற்சி உதவுகிறது. 

அதை தவிர்த்து இதயத்தில் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும், அதன் உறுதித்தன்மையை அதிகரிக்க யோகா பயன்படுகிறது. 

இதயத்தில் உண்டாகும் எல்லா பிரச்சினையும் தீர்க்க யோகா அதிகமாக உதவுகிறது என பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா

ஏற்கனவே இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக அதன் வீரியம் குறைந்து அதன் தாக்கத்தை குறைக்கின்றது. 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரமாகவும் மற்றும் கவுரவமாகவும் வாழ வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

இதற்கு நீங்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் அதில் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சியும் செய்ய வேண்டும். 

இறைச்சியை அரைவேக்காடாக சாப்பிடாதீர்கள் !

இதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் மன பிரச்சினை அனைத்தும் தீர்ந்து எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள், 

இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உங்கள் அடுத்த தலைமுறைகள் உங்களை முன்னோடியாக பார்ப்பார்கள்.

எதிலும் நோக்கமில்லாமல் எந்நேரமும் கவலையாக இருப்பவர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். 

யோகா இயற்கையாகவே உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை வலுவாக்குகிறது. 

உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா

இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் சீராக செயல்பட்டு உங்களை சுறுசுறுப்பாகவும் மற்றும் எந்த கவலையாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ உதவுகிறது. 

இரவில் தூங்குவதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது நள்ளிரவில் முழிப்பு வருபவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். 

ஏன் இந்த கிராமத்து ஆண்களுக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் தெரியுமா?

தினமும் காலையில் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தாலே இரவில் உண்டாகும் தூக்கப் பிரச்சினை முழுமையாகத் தீரும். அது மட்டுமல்லாமல் உங்கள் எண்ணம் மற்றும் சிந்தனையையும் வலுப்படுத்தும்.

உங்கள் உடல்வாகு மற்றும் வயதிற்கு ஏற்ற யோகா பயிற்சியை பற்றி சிறந்த வல்லுநர்களுடன் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள்.