முதுகுத்தண்டு நன்கு செயல்பட ஹாலாசனம் பயிற்சி | Halasana !

இது மல்லாந்து படுத்துச் செய்யும் ஆசனமாகும். இதனுடைய இறுதி நிலை கலப்பை போன்று உள்ளதால் இப்பெயர் பெறலாயிற்று.
முதுகுத்தண்டு நன்கு செயல்பட ஹாலாசனம் பயிற்சி | Halasana !
செய்முறை:

1. விரிப்பில் மல்லாந்து படுக்கவும், கால்களைச் சேர்த்து வைக்கவும், தலைக்கு மேற்புறம் நன்றாக நீட்டி இருக்குமாறு செய்யவும்.

2. கால்களை மெல்ல உயரே தூக்கவும். முழங்கால்களை மடக்காமல் தரையிலிருந்து 45 பாகைக்கு கால்கள் சாய்ந்தபடி இருக்குமாறு வைக்கவும்.

3. கால்களை 90 பாகைக்குக் கொண்டு வரவும்.

4.
 கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டு வரவும்.

5. கால்களைப் பின்புறமாக நீட்டி தரையைத் தொடவும் கைகள் நீட்டியவாறு தரையில் இருக்கட்டும். 

முகவாய்க்கட்டை நெஞ்சுக் குழியைத் தொட்டுக் கொண்டிருக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:

1. முதுகுத் தண்டு வடம், தண்டு வடத்தின் நரம்புகள் மற்றும் முதுகுத் தசைகள் நீட்டி, இழுக்கப்பட்டு நன்கு செயல்படுகின்றன.

2. இரத்த ஓட்ட மிகுதியால் கழுத்து நரம்புகள் பலம் பெறுகின்றன.

3. தைராய்டு சுரப்பிகள் நன்கு செயல்படுகின்றன.

4. இருமல், சளி போன்ற நோய்கள் குணமாகின்றன.
Tags: