தற்போது தான் ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளது என தாலிபன்கள் அறிவிப்பு !





தற்போது தான் ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளது என தாலிபன்கள் அறிவிப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ஆப்கானிஸ்தான் இப்போது தான் முழுமையாக சுதந்திரம் பெற்றுள்ளது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது. 

தற்போது தான் ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளது என தாலிபன்கள் அறிவிப்பு !

கடைசி ராணுவ வீரரும் வெளியேறும் புகைப்படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியதை தாலிபான்கள் வானவேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர். 

பழைய கல்லறைகளைத் தோண்டும் அரசு - கொரோனாவால் உறைந்த பிரேஸில் !

ஆப்கானிஸ்தான் உண்மையாகவே சுதந்திரம் பெற்று விட்டது என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவம் இப்போது அந்த நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளது. 

ஈராக் உட்பட பல நாடுகளில் இதற்கு முன்பு அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

தற்போது தான் ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளது என தாலிபன்கள் அறிவிப்பு !

ஆனால் அமெரிக்க வரலாற்றிலேயே ஆப்கானிஸ்தானில் தான், அதிகப்படியான ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் போர் செய்துள்ளனர்.

காபூல் நகரில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு கடைசி விமானம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை கிளம்பியது. 

விமானத்தில் சுவாசிக்க ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கிறது?

இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வானவேடிக்கைகள் நடத்தியும் தாலிபான்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் இப்போது தான் முழுமையாக சுதந்திரம் பெற்றுள்ளது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். 

ஆகஸ்ட் 14ம் தேதி ஆப்கான் முழுமையாக தாலிபான்கள் வசம் விழுந்த போதிலும் காபூல் விமான நிலையம் முழுக்க அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

தற்போது தான் ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளது என தாலிபன்கள் அறிவிப்பு !

சுமார் 2400 அமெரிக்க இராணுவ வீரர்கள் அங்கே இருந்தபடி, தங்கள் நாட்டுக் குடிமக்கள் மற்றும் பிற நாட்டு குடிமக்களை அவரவர் நாடுகளுக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைத்தனர்.

இதுவரை அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பொதுமக்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர் என்கிறது அதிகாரப்பூர்வ புள்ளி விவரம். 

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் போக காரணம்?

இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு காபூல் விமான நிலையத்தின் அருகே அமெரிக்கப் படைகள் மீது 

ஐஎஸ்ஐஎஸ் கே பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இதற்கு பதிலடியாக இந்த சதியின் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் மீது ட்ரோன் மூலமாக அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தினர் . 

இதையடுத்து அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதில் உறுதியாக இருந்தார்.

மார்பக காம்புகளைச் சுற்றி முடி இருக்கிறதா? அப்ப இத படிங்க !

அந்த வகையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மண்ணை விட்டு முழுமையாக வெளியேறி விட்டது அமெரிக்கா. 

1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் தாலிபான்கள் வசம் ஆப்கான் இருந்தது. ஆனால் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் விவகாரத்துக்கு பிறகு 

தற்போது தான் ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளது என தாலிபன்கள் அறிவிப்பு !

அல்கொய்தா தலைவர் பின்லேடனை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைந்தது. 

இதன் பிறகு தாலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டு அங்கு ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு அமெரிக்கா, ராணுவத் தளவாடங்கள் மற்றும் ராணுவப் பயிற்சிகள் வழங்கியது. 

புற்று நோயாளிகள் சிகிச்சை தாமதிக்கக் கூடாது என்று தெரியுமா? 

இருப்பினும் அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு தாலிபான்கள் எழுச்சி ஆரம்பித்தது. 

ஆப்கானிஸ்தான் படைகள் பல இடங்களில் சண்டையிடாமல் சரண் அடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)