தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு !





தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.

தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு !
ஆப்கானிஸ்தானின் கொந்தளிப்பான சமகால வரலாற்றில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி இப்படிக் கவனிக்கப்படுவது முதன் முறையல்ல. 

1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கும், 90களில் தாலிபன்களுக்கு எதிராகவும் வலிமையான எதிர்ப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது.

தற்போது அங்குள்ள ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) என்ற ஆயுதக் குழு சமீபத்தில் இந்தப் பள்ளத்தாக்கின் வலிமையை உலகுக்கு நினைவூட்டியது.

துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

"சோவியத் ஒன்றியத்தின் செம்படை அதன் வலிமையைக் கொண்டு எங்களை தோற்கடிக்க முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபன்களும் இந்தப் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயன்றனர்; 

ஆனால் தோற்றுப் போனார்கள்" என பிபிசியிடம் தெரிவித்தார் NRF குழுவின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைவர் அலி நசாரி.

எங்கிருக்கிறது பஞ்ஷிர் பள்ளத்தாக்கு?

தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு !

நீண்ட, ஆழமான மற்றும் தூசி நிறைந்த இந்தப் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கே தென்மேற்கு முதல் வடகிழக்கு வரை சுமார் 120 கிமீ நீண்டுள்ளது. 

இது உயரமான மலைச் சிகரங்களால் பாதுகாக்கப்படுகிறது. மலைச் சிகரங்கள் பள்ளத்தாக்கின் தரைப் பகுதிக்கு மேலே சுமார் 10 ஆயிரம் அடி வரை உயர்ந்து நிற்கின்றன. 

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

அவை இங்கு வாழும் மக்களுக்கு இயற்கையான பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.

இங்கு செல்வதற்கு ஒரேயொரு குறுகிய சாலை மட்டுமே உள்ளது. அதுவும் பெரிய பாறைகளூடே வளைந்து நெளிந்து செல்லும் பஞ்ஷிர் நதிக்கு இடையே செல்கிறது.

"இந்தப் பள்ளத்தாக்கு குறித்த ஒரு புராணப் பார்வை உள்ளது. அது ஒரேயொரு பள்ளத்தாக்கு மாத்திரமல்ல. 

அதற்குள் நீங்கள் நுழைந்து பார்த்தால், 21 துணைப் பள்ளத்தாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்" என்று கூறுகிறார் ஷாகிர் ஷெரீபி. 

இவர் குழந்தைப் பருவத்தில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்தவர். தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்த பிறகு அங்கிருந்து வெளியேறி விட்டார்.

ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் வாணி போஜன் !

இந்தப் பள்ளத்தாக்குத் தொடர்ச்சியில் உள்ள முக்கியப் பள்ளத்தாக்கின் கடைசி முனையில் 4,430 மீட்டர் நீளம் கொண்ட அஞ்சோமன் என்ற ஒரு கணவாய் உள்ளது. 

தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு !

அதன் வழியாக இந்துகுஷ் மலையை அடையலாம். மகா அலெக்சாண்டர் மற்றும் டேமர்லேன் ஆகிய நாடோடி அரசர்களின் படைகள் இந்த வழியைப் பயன்படுத்தின.

"வரலாற்று ரீதியாக, பஞ்சிர் பள்ளத்தாக்கு சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது ஓரளவு மதிப்பு கொண்ட கற்கள் உள்பட்ட பல பொருள்கள் இங்கு கிடைக்கின்றன." என்கிறார் 

சயனைட் கொலையாளி தேள்கள் பற்றிய அதிசய கதை !

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்று இணை பேராசிரியர் எலிசபெத் லீக்.

இன்று, பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் நீர்மின் திட்டங்களுக்கான அணைகள் மற்றும் காற்றாலைகள் உள்ளன. 

காபூலில் இருந்து சிக்னல்களைப் பெறும் ரேடியோ அலைகளுக்கான கோபுரம் மற்றும் சாலைக் கட்டுமானங்களுக்கு அமெரிக்கா உதவியிருக்கிறது. 

பள்ளத்தாக்கின் நுழைவு வாயிலில் இருந்து குறைந்த தூரத்தில் அமெரிக்காவின் பழைய படைத்தளமான பாக்ரம் அமைந்திருக்கிறது. 

தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு !

இந்தப் படைத்தளம் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது. பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. 

இவர்களில் பெரும்பாலானவர்கள் தஜிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானின் முக்கிய மொழிகளில் ஒன்றான டாரி மொழியைப் பேசுகிறார்கள்.

தஜிக் இனத்தவர் ஆப்கானிஸ்தானின் மொத்த மக்கள் தொகையான 3.8 கோடியில் கால் பகுதியினர். 

மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன?

ஆனால் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் யாரும் வடக்கு அண்டை நாடான தஜிகிஸ்தானை பின்பற்றுவதில்லை. 

மாறாக அவர்கள் தங்கள் சொந்த உள்ளூர் அடையாளங்களைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறார்கள்.

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் துணிச்சலானவர்கள். ஆப்கானிஸ்தானிலேயே மிகவும் துணிச்சலானவர்கள் இவர்கள் தான்" என்கிறார் ஷெரீபி. 

இவர் மிகச் சமீப காலம் வரை ஆப்கானிஸ்தான் வேளாண் அமைச்சகத்தில் பொது இயக்குநராகப் பணியாற்றி வந்தார். 

இந்த மக்கள் தாலிபன்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்," என்கிறார் அவர்.

வெயிட் லாஸ் லெமன் டிரிங்க் தயார் செய்வது எப்படி?

"இவர்களிடத்தில் போர்க்குணத்தின் நேர்மறையான ஒரு பண்பு உள்ளது". பிரிட்டிஷ், சோவியத் மற்றும் தாலிபன்களுக்கு எதிரான வரலாற்று வெற்றிகள் "மக்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது"

பிரிட்டிஷ், சோவியத் மற்றும் தாலிபன்களுக்கு எதிரான வரலாற்று வெற்றிகள்

2001-ஆம் ஆண்டில் தாலிபன்கள் வீழ்த்தப்பட்ட பிறகு மாவட்டமாக இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மாகாணமாக தகுதி உயர்த்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மிகச் சிறிய மாகாணங்கள் ஒன்றாக மாறியது.

"ஆனால் பஞ்ஷிர் மாகாணமாக மாற்றப்பட்ட முடிவு சர்ச்சைக் குரியதாகவே இருந்தது. 2000-ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் பஞ்ஷிர் போராளிகளுக்கு ஏராளமான வலிமை இருந்தது. 

ஆன்லைனில் இ-பதிவு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள !

அவர்கள் காபூலை மீண்டும் கைப்பற்றுவதற்கு உதவினார்கள். முதன்மையான பங்களிப்பைச் செய்தார்கள்," என்கிறார் ராயல் யுனைட்டட் சர்வீஸஸ் கல்வி நிறுவனத்தின் அன்டோனியோ கியூஸ்டோஸி.

பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் தலைவர்களுக்கு அரசு மற்றும் ராணுவத்தில் முக்கியப் பகுதிகள் வழங்கப்பட்டன. 

தன்னாட்சி பெற்ற மாகாணமாகவும், உள்ளூர் ஆளுநர்களைக் கொண்ட ஒரே மாகாணமாகவும் பஞ்ஷிர் திகழ்ந்தது.

"பொதுவாக மாகாண ஆளுநர்கள் உள்ளூர் மக்களைக் காட்டிலும் மத்தியில் உள்ள அரசாங்கத்துக்கே விசுவாசமாக இருக்க வேண்டும்." என்கிறார் கியூஸ்டோஸி. 

பஞ்ஷிருக்கு மட்டும் சிறப்புச் சலுகை

"ஆனால் பஞ்ஷிருக்கு மட்டும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது". பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தாலிபன் எதிர்ப்புப் படைக்குத் தலைமை வகிப்பவர் 32 வயதான அகமது மசூத். 

குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

இவர் 1980 மற்றும் 90களில் எதிர்ப்புப் படைகளுக்குத் தலைமை வகித்த அகமது ஷா மசூத்தின் மகன். தனது போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் சிறப்புப் படைகளிடமிருந்து ராணுவ ரீதியிலான ஆதரவு இருப்பதாக மசூத் கூறியுள்ளார்.

"எங்களுடைய தந்தையின் காலத்திலிருந்து நாங்கள் பொறுமையாக சேகரித்த வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. 

ஏனென்றால் இந்த நாள் வரக்கூடும் என்று எங்களுக்குத் தெரியும்," என்று வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரையில் மசூத் குறிப்பிட்டுள்ளார்.

மசூத்தின் தந்தை, "பஞ்ஷிரின் சிங்கம்" என்று பட்டப் பெயர் பெற்றவர். சோவியத் மற்றும் தாலிபன் படைகளை விரட்டிய முஜாஹிதீன் தளபதி. பஞ்ஷிர் என்றால் "ஐந்து சிங்கங்கள்" என்று பொருள்.

கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதியின் மகனாக அகமது ஷா மசூத் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் பிறந்தார். 

காபூல் மற்றும் பஞ்ஷிர் மாகாணங்களின் பல இடங்களில் அவரது உருவப்படம் இன்றும் காணப்படுகிறது. 

பஞ்ஷிர் மாகாணங்களின் பல இடங்களில் அவரது உருவப்படம் இன்றும் காணப்படுகிறது

நினைவுச் சின்னங்கள் முதல் விளம்பர பலகைகள் மற்றும் கடை ஜன்னல்கள் வரை அவரது படத்தைக் காணலாம்.

ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) 1978 இல் அதிகாரத்தை வென்ற பிறகு, ஓராண்டில் சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. 

நம் உடல் இம்யூனிட்டிக்கு இதை சாப்பிடுவதே நல்லது !

அந்தக் காலகட்டத்தில் அகமது ஷா மசூத்தால்தா பஞ்ஷிர் பள்ளத்தாக்கு கம்யூனிச எதிர்ப்பின் மையமாக உருவெடுத்தது.

"சோவியத்-ஆப்கன் போரின் போது அவர் கிளர்ச்சியின் முகமாக மாறினார்" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் லீக் கூறுகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)