தூக்கத்திலேயே 300 நாட்களை கழிக்கும் வினோத மனிதர் !

0

ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் 300 நாட்களை உறங்கியவாறே கழித்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தூக்கத்திலேயே 300 நாட்களை கழிக்கும் வினோத மனிதர் !
புர்காரம் என்ற 42 வயதான நபர் பாத்வா என்ற பிரதேசத்தில் வசித்து வருவதுடன், ‘ஒக்சிஸ் ஹைப்பர்சோமியா’ எனும் வினோத நோயால் 23 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டார்.

வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நேரம் உறங்குவார்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆரம்பத்தில் 5 – 6 நாட்கள் தொடர்ந்து உறங்க ஆரம்பித்த அவர், தற்போது 25 நாட்களுக்கு தொடர்ந்து உறங்குவதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வருடத்தில் 300 நாட்கள் உறங்கியே நாட்களை அவர் கழித்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 

சூடான பொருளை ஏன் ஊதி சாப்பிடக்கூடாது?

இந்த நோய் குறித்து வைத்தியர்கள் தெரிவிக்கையில், ”டி.என்.எஃப்-ஆல்பா எனப்படும் புரோட்டீன் மூளையில் ஏற்ற இறக்கத்தின் காரணமாக இப்படி ஏற்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் உறக்கத்திலிருந்து எழ முயன்றாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. அதே போல். தூங்குவதற்கு ஒருநாள் முன்பு அவர் கடுமையான தலைவலியால் பாதிக்கப்படுவார். 

இது ஒரு விநோதமான நோய். இதை குணப்படுத்துவது கடினம் எனத் தெரிவித்துள்ளனர். 

பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !

புர்காரம் உறக்கத்திலிருந்து எழாத காரணத்தினால் அவருக்கான பணிவிடைகளை அவரின் மனைவியே செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)