இந்திய அணியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சிறந்த ஆல் – ரவுண்டர் என்றல் அது ரவீந்திர ஜடேஜா தான். 
கிரிக்கெட் மட்டுமில்லை எல்ல வித்தையும் தெரிந்த வீரர் தான் ஜடேஜா
கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவின் கையில் பலமாக அடிபட்டு விட்டது. 
அதனால் மீதமுள்ள போட்டிகளில் மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான சீரியஸ் போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. 

ஆனால் கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். 

அதிலும் 7 போட்டிகளில் விளையாடி 131 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 62 ரன்களை அடித்துள்ளார். பவுலிங் செய்த ஜடேஜா 7 போட்டிகளில் 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 
டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !
ஆனால் கொரோனா தோற்று காரணமாக மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. 

அதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. 
ஜடேஜா வைரல் வீடியோ !
ஜடேஜாவின் அசத்தலான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். 
அதனால் வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஜடேஜா இடம்பெற்றுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

சமீபத்தில் இந்திய அணியில் ஆல் -ரவுண்டரான ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை ஒன்று பதிவு செய்துள்ளார். 
அதில் நான் வீட்டில் இருக்கும் நேரத்தில் என்னுடைய குதிரை சவாரியை நான் கூர்மைப்படுத்தறேன் என்று பதிவிட்டுள்ளார். 

அதன் வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.