அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், 

பாகிஸ்தான் கிரிக்கெட்டரின் மகளை திருமணம் செய்ய உள்ள வேகப்பந்துவீச்சாளர் !
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாகித் அப்ரிடியின் மூத்த மகளை திருமணம் செய்யவுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ஷாகித் அப்ரிடி (44), பாகிஸ்தான் அணிக்காக 1996-ம் ஆண்டு அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 23 வருடங்கள் விளையாடியுள்ளார். 

கடைசியாக 2018-ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடிய அவர் அதன் பின்னர் ஓய்வு பெற்றார். 

ஷாகித் அப்ரிடிக்கு அக்ஷா அப்ரிடி, அன்ஷா அப்ரிடி, அஜ்வா அப்ரிடி, அஸ்மரா அப்ரிடி, அர்வா அப்ரிடி என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். 

குடலில் புழுக்களை வெளியெற்றும் எருக்கம் பூ !

இதில் மூத்த மகளான அக்ஷா அப்ரிடியை, பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷாவிற்கு திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் தன்னுடைய மகளை அவர் திருமணம் செய்யவுள்ளதை ஷஹீட் அப்ரிடி உறுதிப்படுத்தி யுள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட்டரின் மகளை திருமணம் செய்ய உள்ள வேகப்பந்துவீச்சாளர் !

இது தொடர்பில் ஷஹீட் அப்ரிடி தெரிவிக்கையில், ‘ஷஹீன் ஷா அப்ரிடி எனது வருங்கால மருமகனாகவுள்ளார். அவர்களுடைய நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்படும் வரை இருவருக்கும் தொடர்பு கிடையாது.

ஷஹீன் ஷா அப்ரிடியின் குடும்பத்தினர் என்னுடைய குடும்பத்தினருடன் இது குறித்து பேசினர். இரு குடும்பத்தினரும் தொடர்பில் இருந்து அதன்பின் நிச்சயிக்கப்பட்டது. 

இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என அல்லாஹ் விரும்பினால், அது நடக்கும்.

கேரளா ஸ்பெஷல் மக்ரோனி சர்க்கரை வரட்டி எப்படி செய்வது?

ஷஹீன் ஷா அப்ரிடி தொடர்ந்து விளையாட்டிலும், விளையாட்டிற்கு வெளியிலும் சிறப்பாக செயற்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன” என தெரிவித்தார்.