ரூ.7 லட்சம் வருமானத்தை அள்ளித்தந்த மதன் யூடியூப் - ஆபாசமாக பேசியதால் முடக்கம் !





ரூ.7 லட்சம் வருமானத்தை அள்ளித்தந்த மதன் யூடியூப் - ஆபாசமாக பேசியதால் முடக்கம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

யூ டியூப்’பில் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பலர் யூடியூப் சேனல்களை தொடங்கி உள்ளனர்.

மதன் யூடியூப் முடக்கம் !
பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலான தகவல்களும் அதில் இடம்பெற்று வருகிறது. தங்களுக்கு பிடித்தமான சமையல், 

பொழுது போக்கு வி‌ஷயங்களை சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யூ டியூப்பில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்களை சீரழிக்கும் வகையிலான யூ டியூப் சேனல்களும் அதிகரித்து உள்ளன.

அந்த வகையில் யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார்.

சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?

தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் கேமில் விளையாடுவது எப்படி போன்ற வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவிட்டு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர் மதன். இதனால் இவரை 'பப்ஜி மதன்' என்றே பலரும் அழைத்தனர். 

ரூ.7 லட்சம் வருமானத்தை அள்ளித்தந்த மதன் யூடியூப்

மதன்  தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது.  

ஆரம்பத்தில் பப்ஜி விளையாட்டின் நுணுக்கங்களை பற்றி கூறிய இவர், பிறகு  தன்னோடு விளையாடும் சக பெண்களிடம் கொச்சையாகவும், 

மருந்தின்றி  சளியை விரட்ட வேண்டுமா?

பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அப்படி பின்தொடர்பவர் களிடமிருந்து அவர் குறிப்பிட்ட அளவு தொகையையும் வசூலித்திருக்கிறார். 

இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. 

ரூ.7 லட்சம் வருமானத்தை அள்ளித்தந்த மதன் யூடியூப் - ஆபாசமாக பேசியதால் முடக்கம் !
வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி இந்த புகாரை அளித்து இருந்தார். இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உ ள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயரிங் பட்டதாரியான பப்ஜி மதனின் முழு பெயர் மதன்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர் தனது மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து யூடியூப் சேனல்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா முக்கிய மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகா சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆண்களின் ஹார்மோன் குறைபாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

சேலத்தை சேர்ந்த மதன், தலைமறைவாக உள்ளார். அவரை தேடிக் கண்டுபிடிக்க சேலம் விரைந்த போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

சென்னைலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மதன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

ரூ.7 லட்சம் வருமானத்தை அள்ளித்தந்த மதன் யூடியூப் - ஆபாசமாக பேசியதால் முடக்கம் !

அதே நேரத்தில் மதன் தலைமறைவாக இருந்து கொண்டு தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. 

தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?

ஏற்கனவே மதன் பெண்களுடன் ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போதைய ஆடியோவில் மதன் பேசும் பேச்சுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

சில நேரங்களில் அவரே கிளுகிளுப்பாக பெண்களிடம் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். 

யூடியூப் சேனலுக்கான அனைத்து பணிகளையும் கிருத்திகாவே முன் நின்று செய்துள்ளார். யூடியூப் சேனல்களின் அட்மினாகவும் அவர் இருந்துள்ளார்.

கிருத்திகா மூலமாக மேலும் பல பெண்களும் மதனுடன் ஆபாசமாக உரையாடி இருக்கிறார்கள். அந்த பெண்கள் யார், யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆவியில் வேக வைத்த இடியாப்பத்தால் கிடைக்கும் பலன்கள் !

பெண் ரசிகைகளுடன் அவர் பேசும் பேச்சுக்கள் போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.

மதன்- பெண் ரசிகை இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-

ரசிகை: உங்கள் போட்டோவை எல்லாம் வெளியிட்டுள்ளார்களே?

உங்கள் போட்டோவை எல்லாம் வெளியிட்டுள்ளார்களே?

மதன்: இன்று எனது போட்டோவை வெளியிட்டு ‘யூ டியூப்’ தொடர்பான செய்திகளை கூறி வருகிறார்கள். அதில் எனது அண்ணன் புகைப்படமும் உள்ளது. 

நான் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்த போது நான் எடுத்த புகைப்படத்தை ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது போன்ற வி‌ஷயங்களை ஜாலியாக, குஜாலாக எடுத்து கொள்ள வேண்டியது தான்.

ரசிகை: நீங்கள் ஜெயிலுக்கு சென்று விடுவீர்களா? உங்கள் சேனலை முடக்கி விடுவார்களா?

மதன்: அதற்கு வாய்ப்பே இல்லை. நம்பர் 1 லாயர்களை வைத்துள்ளேன். டெல்லியிலும் வக்கீல்கள் உள்ளனர். லட்சக்கணக்கில் இதற்காக செலவு செய்துள்ளேன். 

சிக்குன்னு இளசுகளை சிக்க வைக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் புகைப்படம் !

ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால் வெளியில் வந்து மீண்டும் ‘யூ டியூப்’ சேனலை தொடங்குவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன்.

அப்போது இவர்களை கிழிகிழி என கிழித்து தற்போது இருப்பதை விட வேகமாக செயல்படுவேன்.

ரசிகை: இதற்கெல்லாம் கைது செய்வார்களா?

இதற்கெல்லாம் கைது செய்வார்களா?

மதன்: அதானே... நம் தலைவர் நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா என்ன? இதற்கெல்லாம் பயந்து நான் முடங்க மாட்டேன்.

அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது நம் உயிருக்கே ஆபத்து வெளியான செய்தி ! 

மதன்: நான் ஜாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை. சாமி கும்பிடுவதும் இல்லை. எல்லோரும் எனக்கு பொதுவானவர்களே.

இவ்வாறு மதனும், பெண் ரசிகையும் பேசும் ஆடியோ நீண்டு கொண்டே செல்கிறது. ரசிகையுடன் மதன் நள்ளிரவில் போனில் பேசியுள்ளார். 

மணி 12.30 ஆகுது. தூங்க செல்லுங்கள் என்று கூறும் மதன் முடிவில் ஐ லவ் யூ என்றும் கூறுகிறார். 

மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த ஆடியோ உரையாடல்களை வைத்து மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வியர்வை அதிகமானால் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் காரணமாக இருக்கலாம் !

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் உள்ளன. அதனை வைத்து மதனை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

ரூ.7 லட்சம் வருமானத்தை அள்ளித்தந்த மதன் யூடியூப் - ஆபாசமாக பேசியதால் முடக்கம் !

போலீசார் மதனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் போலீசுக்கு சவால் விடும் வகையில் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில், மதன் மனைவி கிருத்திகா வங்கிக் கணக்கில் ரூ. 4 கோடி இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

யூடியூப் மூலம் ஆபாசமாக சம்பாதித்து வாங்கிய பப்ஜி மதனின் 2 ஆடி கார்களை காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர்.

சென்னையில் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

2018ம் ஆண்டு ஹோட்டல் நடத்துவதாக கூறி ரூ.5 லட்சம் வரை பணம் பெற்று வங்கி மோசடியில் ஈடுபட்ட மதன் தனது முகத்தை காட்டாமலேயே யூடியூப் சேனல் நடத்தியது அம்பலமாகி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)