இளையான்குடியில் சீமான் கதறி அழுத உருக்கமான வீடியோ !

0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ வெளியாகி உள்ளது.

இளையான்குடியில் சீமான் கதறி அழுத உருக்கமான வீடியோ !
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் இன்று இயற்கை எய்தினார். வயது முதிர்வினால் செந்தமிழன் இன்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும், கட்சி மற்றும் திரைப்பட துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சீமானுக்கு போன் செய்த தனது இரங்கலை தெரிவித்தார். 

அதே போல் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமமுகவின் டிடிவி தினகரன் என்று பல தலைவர்கள் சீமானுக்கு போன் மூலமாகவும், அறிக்கை வாயிலாகவும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

சீமான் தனது தந்தையின் மறைவை யடுத்து தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூருக்கு இன்று சென்றார். 

அன்றாட இயக்கத்துக்கு தேவையான புரதச்சத்தை எப்படிப் பெறலாம் !

இங்கு தான் சீமானின் அப்பா செந்தமிழன் வசித்து வந்தார். அப்பாவின் மரணத்தை அடுத்து சொந்த கிராமத்திற்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ளவதற்காக இன்று சீமான் சென்றார்.

இளையான்குடியில் சீமான் கதறி அழுத உருக்கமான வீடியோ !

சொந்த வீட்டில் அப்பாவின் உடலை பார்த்ததும், உடைந்து போன சீமான் கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். 

அப்பாவின் உடலை பார்த்த படியே கண்ணீர் விட்டு சீமான் கதறினார். சீமான் இந்த உருக்கமான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் இடையே இந்த வீடியோ சீமானின் தந்த செந்தமிழன் உடலுக்கு உறவினர்கள் பலர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள். 

நம்மை கதிகலங்க வைக்கும் கொடுமையான பண்டைய கால அடிமை முறை ! 

இளையான்குடி அருகேயுள்ள அரணையூரிலேயே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)