லாரியில் சிக்கிய தன்னுடைய குட்டியை பாதுகாக்க போராடிய பசு !

0

கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும்.  

லாரியில் சிக்கிய தன்னுடைய குட்டியை பாதுகாக்க போராடிய பசு !
அத்தகைய பாசம் மிக்கது தாய் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக் குட்டியை காப்பாற்ற தாய் நடத்திய பாசப் போராட்டம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளானாலும் சரி தன் குட்டியையோ கன்றையோ, குஞ்சையோ கண்ணை இமை காப்பது போல் காக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

இது மன்னர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும். ஆம். 

சோழர் ஆட்சி காலத்தில் மனு ஆட்சியின் போது துன்பத்தில் இருக்கும் மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்கலாம், உதவி கேட்கலாம்.

அது போன்ற ஒரு சூழலில் ஒரு தாய் பசு ஒன்று ஒரு நாள் ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. 

எனினும் பசுவுக்கு அருகில் போய் நின்றார். அப்போது அந்த கன்று அந்த இடத்தில் இருந்து ஓடியது. பின்னால் அரசரும் சென்றார். அப்போது சாலையில் கன்றுக் குட்டி ஒன்று தேரில் அடிப்பட்டு இறந்துகிடந்தது. 

அப்போது மன்னன் அங்கிருந்த மக்களிடம் விசாரித்ததில் மனுவின் மகன் வீதி விடங்கன் தேர் உலா சென்ற போது அவரையே அறியாமல் கன்றின் மீது சக்கரங்கள் ஏறியதில் அது இறந்தது.

இதற்கு நியாயம் கேட்கவே பசு வந்தது என்பதை அரசர் புரிந்து கொண்டார். இதையடுத்து தன் மகனையும் தேரை ஏற்றி கொன்று பசுவுக்கு நீதி வழங்கினார். 

இதனால் அவர் மனுநீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டார். அது போன்ற ஒரு பாசப் போராட்டத்தை தான் நேற்றைய தினம் ஒரு பசு நடத்தியது.

ஜீன்ஸ் பாழாகாமல் நீண்ட நாட்கள் வருவதற்கான சில டிப்ஸ் !

கீழ் இரண்டாம் வீதியில் கடைக்கு சரக்கு இறக்குவதற்காக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பசுவுடன் வந்த கன்றுக்குட்டி லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. 

லாரிக்கு அடியில் சென்ற கன்று வெளியே வர முடியாமல் அவதியடைந்தது. இதற்காக அங்கும் இங்கும் ஓடியது. 

அங்கிருந்த பொதுமக்கள் வந்து கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அவர்களை நம்பாமல் அதுவாகவே காப்பாற்ற சுற்றி சுற்றி ஓடியது.

எப்போதும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பது எப்படி?

இதையடுத்து கம்பை வைத்து தாய் பசுவை கட்டுப்படுத்த முயற்சி நடந்த நிலையில் கன்றின் கால்களை மடக்க செய்து லாரியின் வெளியிலிருந்து இழுத்தனர். 

இதையடுத்து கன்றை பார்த்த மகிழ்ச்சியில் பசுவும் கன்றும் ஒன்றையொன்று தழுவி கொண்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு சிறிய குட்டிக்கதை படியுங்கள்........

ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார், அவர் ஒரு கன்று குட்டியை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார், திடீரென வியாபாரி வெளியூர்க்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்,

ஒரு சிறிய குட்டிக்கதை
கன்று குட்டியை தன்னுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது வியாபாரிக்கு, அதனால் கன்று குட்டியை தன் பக்கத்து வீட்டு காரரிடம் கொடுத்து விட்டு விட்டு, நான் விரைவாக வந்து விடுவேன்.

நான் எனது கன்று குட்டியை எப்படி விட்டு செல்கிறேனோ நான் கேட்கும் போது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும், 

எவ்வித மாற்றமும் சேதமுமின்றி என்று கூறி,கன்றை பக்கத்து வீட்டு காரரிடம் விட்டு சென்றார்.

நாட்கள் பல கழிந்தது, மாதங்கள் பல கழிந்தது, வருடங்கள் பல கழிந்தது.. கன்று வளர்ந்து பசுவானது பால் கொடுக்க ஆரம்பித்தது, 

பக்கத்து வீட்டு காரரும் தினந்தோறும் பசுவிடம் பால் கறந்து விற்று வந்தார் சிறிது காலம் கழித்து பசு கன்று ஒன்றை ஈன்றது,

நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !

திடீரென வியாபாரி பக்கத்து வீட்டு காரரிடம் வந்து தனது கன்று வளர்ந்து பசுவாகியிருக்கும் எனது பசுவை தருமாறு கேட்டார், 

அதற்கு பக்கத்து வீட்டு காரர் மறுப்பு சொல்லவே இருவருக்கும் வாக்குவாதம் முட்டியது.

மரியாதை இராமனை பற்றி கேள்விபட்டு இருவரும் அவரிடம் சென்று முறையிடுவோம் என்று முடிவு செய்து மரியாதை இராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர்.

பசு கன்று கதை

மரியாதை இராமன் இருவரையும் விசாரித்தார் வியாபாரியோ இது என்னுடைய பசு நான் தான் சிறிது காலத்திற்கு முன்பு இது கன்றாக இருந்த போது, 

இவரிடம் ஒப்படைத்து விட்டு நான் கேட்கும் போது அப்படியே கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றேன் என்றார்,

பக்கத்து வீட்டு காரரோ இவர் பல காலத்திற்கு முன்பே என்னிடத்தில் கன்றை விட்டு சென்றார், இப்பொழுது வரை நான் தான் எனது கை செலவில் இதற்கு தீவனம் வாங்கி போட்டு வருகிறேன், 

அதனால் இந்த பசு எனக்கே சொந்தம் என்றார், மரியாதை இராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார், 

மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்முறை !

பிறகு பசுவையும் அது ஈன்ற கன்றையும் நாளை கொண்டு வருமாறு கூறி தீர்ப்பை நாளை கூறுகிறேன் என்றார்

இரவு கழிந்தது, சூரியன் உதித்தது, ஊர் மக்களும் தீர்ப்பை கேட்க அவையில் கூடினர், 

பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம் என்றார் மரியாதை இராமன், அதற்கு வியாபாரியோ இது எப்படி நியாயம் என்று உரத்த குரலில் கேட்டார்.

பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டாம்

அதற்கு மரியாதை இராமன் நீங்கள் தானே பக்கத்து வீட்டு காரரிடம் நான் எப்படி என் கன்றை விட்டு செல்கிறேனோ, நான் திருப்பி கேட்கும் போது எவ்வித பாதிப்பும், 

மாற்றமுமின்றி அப்படியே கொடுக்க வேண்டும் என்றீரே, அந்த பசுவின் கன்று நீங்கள் எப்படி விட்டு சென்றீரோ அப்படியே தானே உள்ளது என்றார்.

மரியாதையும் ராமன் பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம், அது ஈன்ற கன்று வியாபாரிக்கு சொந்தம், 

மேலும் கன்று வளரும் வரை பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டாம் என்று கூறி தீர்ப்பை முடித்து வைத்தார்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)