அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி படிச்சி பாருங்க... !

0

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி ஆளும் கட்சியான அதிமுக 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. 

அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி படிச்சி பாருங்க
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., பா.ஜ.க, த.மா.கா. உள்பட கூட்டணி கட்சிகளுக்கு 55 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

தேர்தலின் நாயகனே தேர்தல் அறிக்கை தான் என்பதால், அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் காத்து கொண்டு இருக்கின்றனர். 

சர்வதேச மகளிர் தினம் அன்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். 

குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்பத் தலைவியிடம் வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்று அறிவித்திருந்தார். 

இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது 

அதிமுக. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி படிச்சி பாருங்க... !

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:

அனைவருக்கும் வீடு

குலவிளக்கு திட்டம்,

பேருந்தில் மகளிருக்கு சலுகை

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்

விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்

அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் சிலிண்டர்

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி

விலையில்லா அரசு கேபிள்

நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வு

மதுமான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்

எழுவர் விடுதலை

தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு

சிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்

அம்மா வாஷிங் மெஷின் திட்டம்

மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி

கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500ஆக உயர்த்தப்படும்

நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

கைத்தறிக்கு GST வரி விலக்கு

பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை

மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்

அனைத்து மினி ஐடி பார்க்

அதிமுக கூட்டணியில் பாஜக, த.மா.க போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings