கமல்ஹாசன் சொத்து விபரம்... சட்டமன்ற தேர்தல் 2021 !

0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

கமல்ஹாசன் சொத்து விபரம்... சட்டமன்ற தேர்தல் 2021 !
வேட்புமனு தாக்கல் செய்த அவர், பிரமாணப் பத்திரத்தில் தனக்கு இருக்கும் சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். 

கமல்ஹாசனுக்கு 176 கோடியே 99 லட்சம் ரூபாய் சொத்துக்கள் உள்ளன. 50 கோடி ரூபாய்க்கு கடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன். 

கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களம் காணும் கமல்ஹாசனும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக கடமையினை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்றது. 

இது என் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மை தான், எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம் என்றார்.

உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!

கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள பிராமணப்பத்திரத்தில் 45 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாகவும், 

131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மொத்த சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய உள்ளது. கடன் 50 கோடி ரூபாய்க்கு உள்ளது. 2 கோடி மதிப்புள்ள லெக்சஸ் மாடல் காரும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபுள்யூ காரும் உள்ளது. 

லண்டனில் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்

கோவை சிங்காநல்லூர் தொகுதி மநீம வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.170 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். 

கமல்ஹாசன் சொத்து விபரம்... சட்டமன்ற தேர்தல் 2021 !

மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. தொழிலதிபரான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

இவர், கடந்த 2019ஆம் ஆண்டு கோவை லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், வேட்பாளராக களம் இறங்கி, வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்தார்.

வாக்கிங்... ஜாகிங்... தவறுகள் தவிர்க்கும் வழிகள் !

தற்போது மகேந்திரன் முதல் முறையாக சிங்காநல்லுார் தொகுதியில் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடுகிறார். மகேந்திரன் தனது சொத்து மதிப்பு ரூ.170 கோடி என பிராமணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இவரது அசையும் சொத்து ரூ.10 கோடி, அசையா சொத்து மதிப்பு 160 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)