பிரபல வெப் சீரிஸ் நடிகர் தற்கொலை !

0

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் யூ-டியூப் சீரிஸான 'வல்லமை தாராயோ'விலும் லோகேஷ் என்கிற கேரக்டரில் நடித்து வந்தார் ஸ்ரீவத்சவ். 

பிரபல வெப் சீரிஸ் நடிகர் தற்கொலை
இந்நிலையில் கடந்த புதன் கிழமை ஷூட்டிங் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பியவரை அதன் பிறகு வீட்டார் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. 

பொதுவாக ஷூட்டிங் வந்து விட்டால் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுவது ஸ்ரீவத்சவின் வழக்கமாம்.

புதன்கிழமை எந்த வொரு ஷூட்டிங்கும் இல்லாத நிலையில் ஷூட்டிங் கிளம்பிச் சென்ற ஸ்ரீவத்சவ் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அவருடைய இன்னொரு வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நடிகையின் லிப் லாக் முத்தம்.. இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ !

அந்த இன்னொரு வீடு ஸ்ரீவத்சவின் தந்தை பிசினஸுக்காகப் பயன்படுத்தி வந்த வீடாம். ஸ்ரீவத்சவ் அடிக்கடி இந்த வீட்டில் தான் தனிமையில் இருப்பார் என்கிறார்கள். 

புதன்கிழமை அந்த வீட்டுக்குச் சென்று தூக்கில் தொங்கியவரை மறுநாள் தான் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீவத்சவின் உடல் மீட்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்குப் பின் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீவத்சவ் சில மாதங்களாகவே மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். 

இல்லாதது இருப்பது போலத் தோன்றும் 'Hallucination' பிரச்னையால் அவர் அவதிப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீவத்சவின் அம்மா பிரபல மனநல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings