செல்லப்பிராணிகளை எப்போதும் சுத்தமாக பராமரிக்க சில ஆலோசனைகள்

0

சமீப காலமாக செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது புதிய ட்ரெண்டிங்காக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

செல்லப்பிராணிகளை எப்போதும் சுத்தமாக பராமரிக்க சில ஆலோசனைகள்

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறி விட்டிருக்கின்றன. 

குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் செல்லப்பிராணிகளுக்காக ஒதுக்கப்படும் நேரமும் காட்டப்படும் அன்பும் அதிகமாக இருக்கிறது. 

ஊரடங்கு போன்ற சமயங்களில் மக்கள் வீட்டிலேயே காலத்தை கழித்து வருவதால் செல்லப்பிராணிகள் வளர்ப்பு மீது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

விலங்குகளை வீட்டில் வளர்க்கும் போது அவற்றின் நடத்தையையும் உணவு உள்ளிட்ட இயற்கைத் தேவைகளையும் மனிதன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டுமெனில், அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். 

செல்லப் பிராணிகளுக்கான காப்பீட்டுத் திட்டங்களும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக நாய்கள் விபத்தில் சிக்கினாலோ, இறந்தாலோ, திருடப்பட்டாலோ அதற்கான காப்பீட்டைப் பெற முடியும்.

செல்லப்பிராணிகளை பராமரிக்க சில ஆலோசனைகள்

ஆனால் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆரோக்கியமான உணவு, சரியான நேரத்தில் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வது, 

விளையாட்டு நேரம், உடல் ஆரோக்கியம் மற்றும் மிக முக்கியமாக அவற்றிற்கு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்ய வேண்டும். 

குறிப்பாக அவற்றை நம் குடும்பத்தில் ஒருவரை போல கவனித்துக் கொள்வது அவசியம். செல்லப்பிராணிகளை பராமரிக்கும் அதே சமயத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். 

ஒரே நேரத்தில், செல்லப்பிராணிகளையும் ஒரு சுத்தமான வீட்டுச் சூழலையும் பராமரிப்பது என்பது கடினம் தான். 

இருப்பினும் சில வழிமுறைகளை பின்பற்றினால் உங்களால் வீடு மற்றும் செல்லப்பிராணி இரண்டையும் சுத்தமாக வைத்திருக்க முடியும்.

இருக்கை, டேபிளை சுத்தப்படுத்த வேண்டும்

இருக்கை, டேபிளை சுத்தப்படுத்த வேண்டும்

தூசி போலவே, செல்லப்பிராணி முடி மற்றும் அதில் உள்ள டாண்ட்ரப் காற்றில் பறந்து குறைந்த மேற்பரப்பில் விழக்கூடும். 

எனவே வீட்டில் உள்ள கை நாற்காலிகள் மற்றும் சோபா உட்பட அனைத்து பொருட்களையும் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். வீட்டின் தலத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். 

வீடு முழுவதும் சுத்தப்படுத்தலாம் 

வீடு முழுவதும் சுத்தப்படுத்தலாம்

வீட்டில் கம்பளம் போன்றவற்றை தரை விரிப்பாக பயன்படுத்தும் பட்சத்தில் செல்லப்பிராணிகள் முடி அவற்றில் நன்கு ஒட்டிக் கொள்ளும். 

அதனை Vacuum Cleaner மெஷின் உதவியுடன் நீக்கலாம். வீடு முழுவதும் வாரத்திற்கு ஒரு முறை Vacuum Cleaner உபயோகப்படுத்துவதால் வீட்டின் சுத்தத்தை பராமரிக்க முடியும். 

இருப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் 

இருப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும்

உங்கள் செல்லப்பிராணிகள் அதிக நேரம் செலவழிக்கும் இடங்கள் மற்றும் அவை பயன்படுத்தும் போர்வைகள், மெத்தைகள் மற்றும் படுக்கைகளை துவைத்து நன்றாக காய வைக்க வேண்டும். 

இதன் மூலம் தூசிப் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை விலகிச் செல்லும். எனவே செல்லப்பிராணிகளுக்கு அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது. இதனால் முடி உதிர்தலை தடுக்க முடியும். 

நாய்களுக்கான பராமரிப்பு

நாய்களுக்கான பராமரிப்பு

நாய்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க தினமும் சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பானது உங்கள் செல்லப்பிராணிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். 

தினமும் அவற்றை அப்படி தூய்மை செய்தால் தேவையற்ற முடி வெளிவருவதுடன், முடியானது வலுவடையும். 

சீப்பைக் கொண்டு சுத்தம் செய்த பின், நாய்களை சுத்தம் செய்வதற்காகவே விற்கப்பட்டுள்ள கையுறை அணிந்து ஒரு முறை சுத்தம் செய்தால் எஞ்சிய உதிர்ந்த முடியும் வந்து விடும். 

மேலும் நாய்களுக்கு ஒரு சிறந்த மசாஜ் மாதிரி இருக்கும். அவற்றிற்கு மிகவும் பிடிக்கும். 

மேலும் செல்லப்பிராணிகளை குளிப்பாட்டும் போது, அதன் முடியில் சிறிது எண்ணெய் பசை இருக்கும் படியான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். இது அதன் முடி உதிர்தலைத் தடுக்கும்.  

முடிவு

செல்லப் பிராணிகளுக்கும் நோய்கள் பரவும்

மனிதர்களிடமிருந்து அவர்களது செல்லப் பிராணிகளுக்கும் நோய்கள் பரவுகின்றன. 

குறிப்பாக, நாய் மற்றும் பூனைகளுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு அதை வளர்ப்பவர்களின் புகைப்பழக்கமே காரணமாக இருக்கிறது. 

மேலும், மனிதர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களை தங்களது செல்லப் பிராணிகளுக்கும் கொடுப்பதாலும் அவற்றின் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)